ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்க்காக தனி-விமானம் மூலம் திருச்சி வந்து கலெக்டர் ஆபீசுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் புடைசூழ சென்றார். ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த நேரம் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தும் அமைச்சர் நேருவும், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். இந்நேரத்தில் இருதரப்பு தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் மீது செருப்பு மற்றும் கல் வீசப்பட்டதால் .அ.தி.மு.க மற்றும் தி.மு.க., தொண்டர்கள் மோதும் சூழ்நிலை உருவானது . இதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

Leave a Reply