சீதாராம் யெச்சூரி கேள்வி பொது கணக்கு குழு (பிஏசி) முன்பாக ஆஜராக பிரதமர் தயாராக இருக்கும்பொழுது ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு ) முன்பாக ஆஜராக பிரதமர் மன்மோகன் சிங் தயங்குவது ஏன் என மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார,

நாடாளுமன்ற கூட்டு குழு மற்றும் பொது கணக்கு குழு இரண்டுமே நாடாளுமன்ற குழுக்கள்தான். பல கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். இவாறுயிருக்க பொது கணக்கு குழு முன்பு ஆஜராக தயாராக உள்ள பிரதமர், நாடாளுமன்ற கூட்டு குழு முன்பு ஆஜராக தயங்குவது ஏன் என தெரியவில்லை. பிஏசி என்பது வரவு, செலவுகளை மட்டுமே சரி பார்க்கும் அதிகாரத்தை கொண்டது என்று பீப்பிள் டெமாகரசி தலையங்கத்தில் தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply