தமிழக அரசின், கலைஞர் காப்பீட்டு திட்டம் தோல்வியின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது ,இது வரை 250 க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் விலகி இருப்பதாக தெரிய வருகிறது . சராசரியாக மாதத்துக்கு 25 மருத்துவமனைகள் வரை இத்திட்டத்திலிருந்து விலகி வருகின்றன,

திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்,போக போக பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்தின. இதன் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பலருக்கும்

சிகிச்சைக்கான தொகைகளில், குறிப்பிட்ட அளவு வரை பிடித்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் மீதி தொகையை, நோயாளிகளிடம் இருந்து வசூலிக்க துவங்கின. இது மருத்துவ மனைகளின் நிர்வாகத்துக்கும், நோயாளிகளின்-உறவினர்களுக்கும் இடையே பெரும் மோதலை உருவாக்கியது . இதனால் பல மருத்துவமனைகள், காப்பீட்டு திட்டத்திலிருந்து விலகி வருகின்றன .

ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் 1,152 தனியார் மருத்துவமனைகள் வரை இத்திட்டத்தில் பதிவு செய்திருந்தன. தற்போதைய நிலவரப்படி 875 தனியார் மருத்துவமனைகல் மட்டுமே காப்பீட்டு திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

உண்மையான தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டமும் தோல்வியடையாது , ஓட்டுக்காக செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டமும் தோல்வியையே தழுவும்

Leave a Reply