கர்நாடகா  கடில் துர்கா பரமேஸ்வரி ஆலயம்கர்நாடகா மானிலத்தில் பல புராண ஆலயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் தஷிண கர்நாடகத்தில் உள்ள கடில் துர்கா பரமேஸ்வரி ஆலயம்.மங்களூர் மற்றும் உடுப்பியில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு வசதியாக செல்ல முடியும். நாள் ஒன்றுக்கு இருபதுக்கும் மேலாக பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுகின்றதாம். வருடத்தில் தொடர்ந்து எட்டு நாட்கள் விழா கொண்டாடப்படுகின்றது. தினமும் காலை நான்கு

மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு தேவிக்கு அலங்காரம் செய்யப்பட்ட பின் ஆறு மணிக்கு பக்தர்களுக்கு ஆலயம் திறந்து விடப்படுகின்றது. இரவு பத்துமணிக்கு ஆலயம் மூடப்பட்டு விடும்.

கடில் துர்கா பரமேஸ்வரி தேவியின் கதை

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அருணாகரா என்ற கொடிய அசுரன்; பெரும் தவம் செய்து பிரும்மாவிடம் இருநது தான் எளிதில் அழிய முடியாத வரத்தைப் பெற்றிருந்தான். பிரும்மா கொடுத்திருந்த வரத்தின் படி அவன் தொடர்நது காயத்ரி மந்திரம் ஓதிக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் அப்படி அவன் செய்து கொண்டு இருக்கும் வரை அந்த அசுரனை தேவர்கள், ஆண்கள், பெண்கள், இரு கால்கள் கொண்ட மனிதர்கள்;, மற்றும் நாலு கால்கள் கொண்ட மிருகங்கள் என எந்த ஜீவன்களினாலும; கொல்ல முடியாது. அப்படிப் பட்ட அந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட அசுரன் தேவலோகம் சென்று அங்கிருந்த தேவர்களை விரட்டி அடித்தான். வருணனையும் துரத்தி அடிக்க பூமியிலே மழை பொழிவது நின்றது. உலகில் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்து ஆடின. தண்ணீர் இன்றி ஏரிகள், குளங்கள், கிணருகள் என அனைத்தும் வற்றி விட்டன. கொத்து கொத்தாக மனிதர்களும், விலங்குகளும் புமியில் பஞ்சத்தினால் மடிந்து விழ பூமியே மயான பூமி போல மாறலாயிற்று. அருணா கராவின் கொட்டம் தலைக்கு மேல் போயிற்று. அதனால் கவலையுற்ற தேவர்களும் ரிஷி முனிவர்களும் சிவ பெருமானிடம் சென்று உலகத்தின் நிலையை கூறி அவரே தம்மைக்காக்க வேண்டும் என வேண்டினர். அவரும் அவர்களுக்கு தக்கசமயத்தில் தான் உதவி செய்வதாக உறுதி தந்து அனுப்பினார்.

அந்த நேரத்தில் ஒரு அடர்ந்த காட்டில் அமைதியாக தவம் செய்து கொண்டு இருந்த ஜபாலி முனிவர் உலகில் அருணாகராவினால் தோன்று விக்கப்பட்டிருந்த பஞ்சக் காட்சியைக் கண்டு மனம் வருந்தினார். இந்த உலகை இப்படிப்பட்ட கோரத்தில் இருந்து காக்க வேண்டும். அவர்களுடைய பஞ்சத்தைப் போக்கவும், குடிக்கவும் தண்ணீர் எப்படி கொண்டு வர முடியும் என யோசிக்கலானார். அதற்கு ஒரே வழி தெய்வத்தை வேண்டிக் கொண்டு யாகம் செய்வது தான்.ஆனால் அந்த யாகத்தை செய்வதற்கு வேண்டிய தண்ணீர் கூட பூமியில் இல்லாத நிலையில் யாகத்திற்குத் தேவையான நீரையும் பிற பொருட்களையும் எங்கிருந்து கொண்டு வருவது? யோசனை செய்தவர் நேராக இந்திர லோகம் சென்றார். அங்கு இந்திரனிடம் நிலைமையை எடுத்துக் கூறி மக்களை காப்பாற்ற யாகம் செய்ய நினைக்கும் தனக்கு அனைத்தையும் தரும் காமதேனு பசுவை சிறிது நாட்கள் தந்து யாகத்திற்கு உதவுமாறு அவரிடம் கேட்டார். அந்த நேரத்தில் காமதேனுப் பசு மற்றொரு யாகத்திற்காக வேறு ஒரு லோகத்திற்குச் சென்று இருந்ததினால் அவளைப் போன்றே சக்தி கொண்டு இருந்த "காமதேனுவின் மகளான நந்தினியை அழைத்துச் செல்ல இந்திரன் அனுமதி கொடுத்தார். ஜபாலி முனிவரும் மனம் மகிழ்ந்து நந்தினியிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறி தன்னுடன் பூமிக்கு வந்து உதவுமாறு வேண்டினார்". ஆனால் நந்தினி ஆணவம் கொண்டு பாவிகள் நிறைந்த பூலோகத்திற்கு தன்னால் வர முடியாது எனக் கூறிவிட்டு அவருடன் பூலோகத்திற்கு செல்ல மறுத்து விட்டது.

அதனால் கோபம் கொண்டார் ஜபாலி முனிவர்.மக்களின் துயரத்திற்கு உதவி செய்ய முன் வராத அவள் ஒரு நதியாக மாறி அந்த பூமியிலேயே சென்று பிறக்க வேண்டும் என்று சாபமிட்டார். அவருடைய சாபத்தைக் கண்ட நந்தினி கலக்க முற்று அவரிடம் மன்னிப்பு கோரினாள்.ஆனால் முனிவர்கள் ஒரு முறை சாபம் தந்து விட்டால் அதைத் திரும்பப் பெற முடியாது. சாப விமோசனத்திற்கு வழி; மட்டுமே காட்ட முடியும் என்பதினால் நந்தினி பூமியில் சென்று நதியாகப் பிறக்க வேண்டியதை தவிர்க்க முடியாது எனவும், ஆனால் அவளுக்கு அந்த இடத்தில் ஒரு காலத்தில் வந்து எழ உள்ள துர்கா தேவி மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனவும் கூறி அனுப்பினார். வேறுவழி இன்றி நந்தினியும் கனககிரி என்ற இடத்திற்குச் சென்று அங்கு நதியாக உருவெடுத்து புமியில் ஓடத் துவங்க அந்த நதியின் உதவியுடன் ஜபாலி முனிவரும் தன்னுடைய யாகத்தைச் சிறப்பாக செய்து முடித்தார். அதன் பயனாக பூமியில் பஞ்சமும் பட்டினியும் ஒழியத் துவங்கியது.

பூமியில் பஞ்சமும் பட்டினியும் நந்தினியின் ஒத்துழைப்பினால் ஒழிந்து விட்டதால் மீண்டும் அருணாகரா தனது அட்டகாசத்தைத் துவக்குவான் எனத் தெரிந்த சிவபெருமானும் தன்னுடைய மற்ற இரு கணங்களான பிரும்மா மற்றும் விஷ்ணுவுடன் கிளம்பிச் சென்று பராசக்தியிடம் அருணாகராவை அழிக்க உபாயம் கூறுமாறு வேண்டினர். அவள் கூறிய யோசனைப்படி அவர்கள் முதலில் பிரகஸ்பதியை அந்த அசுரனிடம் அனுப்பி அவனுடைய பராக்கரமங்களை பற்றி அவனிடமே போலியாக வானளவப் புகழ்ந்து பேசி அவனை தன் நிலையை மறக்கச் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி பிரகஸ்பதி பகவானும் அருணாகராவிடம் சென்று அவனுடைய சக்தியைப் பற்றி வானளாவுப் புகழ்ந்து, அவனை மூவுலகுக்கும் தெய்வம் என அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறி அவனுடைய நம்பிக்கையைப் பெற்றார். பிரகஸ்பதி கூறியதைக் கேட்ட அசுரனின் சுயபுத்தி மடிந்தது. தன்னையே மூவுலகுக்கும் கடவுள் என அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டப் பின் எதற்காக காயத்ரி மந்திரம் ஓதிக் கொண்டு தன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என இறுமாப்புக் கொண்டான;.

ஆந்த நிலையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பரமேஸ்வரி. காயத்ரி மந்திர உச்சாடனம் செய்தவன் அதை சொல்வதை நிறுத்தியதும் அவன் வீட்டுத் தோட்டத்தில் சென்று ஒரு அழகிய மங்கைப் போல உலவிக் கொண்டு நின்றாள். அந்த நேரத்தில் அங்கு உலாவ வந்த அசுரன் அவள் அழகை தூரத்தில் இருந்து பார்த்ததும் அவள் மீது மையல் கொண்டான். அவளை தான் அடைய வேண்டும் என ஆசை கொண்டு அவளை நோக்கி ஓடிச் செல்ல , துரத்தி வந்த அவனைக் கண்டு அவளும் ஓடத் துவங்கினாள். அவனும் அவளை விடாமல் துரத்திக் கொண்டு ஓட மலைப் பகுதியில் இருந்த ஒரு பாறை இடுக்கில் அவள் உட்புகுந்து அங்கிருந்த பெரும் காட்டுத் தேனிகள் இருந்த தேன் கூட்டில் தானும் ஒரு தேனியாக அமர்ந்து கொண்டாள். அவளைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தவன் பாறை இடுக்கில் புகுந்து கொண்டவளை வெளியில் இழுக்க இடுக்கிற்குள்; கையை விட்டு அவளைத் தேட, அந்த காட்டுத் தேன் கூடு கலைந்தது. கூடுகலைந்த கோபத்தில் வெளி வந்த காட்டுத் தேனிக்கள் அந்த அசுரனை சூழ்ந்து கொண்டு அவனைக் கொட்டித் தீர்த்தன. காட்டுத் தேனி உருவில் இருந்த பரமேஸ்வரியும் பயங்கரக் கோபத்துடன் வெளி வந்து அவனைக் கொட்டிக் கொட்டி மரணம் அடையவைத்தாள். அவனால் அந்த பயங்கரத் தேனிக்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. காயத்ரி மந்திரம் உச்சரிப்பதை நிறுத்திய அந்த அசுரன் இப்படியாக தன்னுடைய அழிவைத் தானாகவே தேடிக் கொண்டான்;.

கடில் துர்கா பரமேஸ்வரி ஆலயம் எழுந்தகதை

தூரத்தில் இருந்து அந்த காட்சியைக் கண்ட ஜபாலி முனிவரும் இந்திர லோகத்தில் இருந்து வந்த இந்திரனும் பரமேஸ்வரியை வேண்டிக் கொண்டு அவளுடைய சிலைக்கு இளநீரினால் அபிஷேகம் செய்து அவளுடைய கோபத்தைக் குறைத்துக் கொள்ளு மாறு வேண்டிக் கொள்ள, தேனி உருவில் கோபத்துடன் அந்த மலைப் பகுதியில் பறந்து கொண்டு இருந்தவள் தன்னுடைய கோபத்தைத் தணித்துக் கொண்டு லிங்கரூபம் எடுத்து அங்கு ஓடிக் கொண்டு இருந்த நதியின் இடையில் தோன்றினாள். அவள் நதியில் இறங்கியதுமே நந்தினியின் சாபமும் மறைந்தது. தேவி லிங்க வடிவம் பெற்ற இடத்தில் பரமேஸ்வரியின் ஆலயம் அமைய அவளை அந்த இடத்தில் துர்கா பரமேஸ்வரியாகப் பூஜிக்கத் துவங்கினர். கடிலா என்பது தேவியின் இடுப்புப் பகுதியைக் குறித்ததினாலும் (லிங்க ரூபத்தில் அவள் இருந்ததினால் பாதி உடம்பே நீரில் மூழ்கி இருந்தது),அவள் நதிக்கு இடையில் தோன்றியதால் நடு என்ற அர்த்தம் தரும் வகையில் கடி எனவும் , இடம் என்ற அர்த்தத்தை தரும் லா என்ற சொல்லும் இணைந்த சொல்லான கடி லா என்ற பெயரில் அங்கு ஆலயம் எழும்ப, பின்னர் கடிலா என்பது மருவி கடில் என ஆயிற்று.

ஆலயம் சேல்லும் வழி; கர்னாடகாவில் உள்ள மங்களூரில் இருந்தும் (சுமார் 30-35 கி.மீ ) உடுப்பி (சுமார் 35-40 கி.மீ ) அல்லது தர்மஸ்தலாவில் இருந்தும் கடில் துர்கா பரமேஸ்வரி ஆலயம் சேல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.