டில்லிவாசிகளை பீதியில் ஆழ்த்தி வந்த கில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்திற்கு இன்று முதல் நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 800க்கும் அதிகமான பஸ்கள் நிறுத்தபட்டுள்ளது .
டி்ல்லி மக்களின் போக்குவரத்து வசதிக்காக புளூலைன் என்ற பெயரில் 4000த்திற்கும் அதிகமான தனியா
பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் தெற்கு டில்லியில் மட்டும் 1500க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களை அசுரவேகத்தில் டிரைவர்கள் இயக்கியதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டன, 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரைக்கும் சுமார் 500க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து டில்லி ஐகோர்டில் புளூலைன் பஸ்களைஇயக்க தடைகோரி கடந்த 2007ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணையை ஜனவரி 20ம் தேதி நீதிபதிகள் ஏகே. சிகிரி, சுரேஷ்கைட் ஆகியோர் விசாரணையை நடத்தி வழக்கை ஜன., 28ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில் வரும்பிப்.1ம் தேதிக்குள் பஸ்களை நிறுத்தஉத்தரவிட்டதை தொடர்ந்து இன்றுமுதல் 840 புளுலைன் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .