பெண் நக்சலைட் தலைவர் பத்மாவை ஒரிசா அதரடிப்படையினர் காட்டுக்குள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்

இவர் நக்சலைட் இயக்கத்தின் முக்கிய தலைவர் ராமகிருஷ்ணாவின் .மனைவியாவார் , இவரது தலைமையின் கீழ் பெண் நக்சலைட்படை இயங்கி வருகிறது . இவர் மீது பல்வேறு கொலை, கொல்லை முயற்சி வழக்குகள் உள்ளது . நகராட்சி, பஞ்சாயத்து தலைவர்கள் மீதான தாக்குதலிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

பத்மா பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.2 -லட்சம் பரிசு வழங்கப்படும் என ஆந்திர-போலீசார் அறிவித்தனர். ஆனாலும் அவருக்கு கிராமத்து மக்களிடம் இருந்த அபரிமிதமான செல்வாக்கு காரணமாக அவரை கைது செய்ய இயலவில்லை.

இந்நிலையில் சில-பெண் நக்சலைட்டுகளுடன் அவர் ஒரிசா- ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஒரிசா அதரடி படையினர் காட்டுக்குள் பத்மாவை கைது செய்தனர்.

Leave a Reply