இலங்கையில் தமிழர்கள் அதிகஅளவில் வசிக்கும் வடக்குப்பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்” தமிழ் தேசிய கூட்டமைப்பு”கு பெரும்வெற்றி கிடைத்துள்ளது.

வடக்கில் இருக்கும் 20பிரதேச சபைகளில் 18சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இருசபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

யாழ்_மாவட்டத்தில் 3நகரசபைகளுக்கும் 13 பிரதேசசபைகளுக்கும் கிளிநொச்சியில் 3பிரதேச சபைகளுக்கும், முல்லைதீவில் ஒருபிரதேச சபைக்கும் தேர்தல் நடைபெற்றது . கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் இரண்டு பிரதேச_சபைகளுக்கும் வாக்குபதிவு நடைபெற்றது. திருகோணமலை_மாவட்டத்தில் 3பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடந்தது .யாழ்மாவட்டத்தில் 48சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது . கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் 65சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது

இராணுவத்தின் கெடுபிடி, அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் போன்ற பல அச்சுறுத்தல் இருந்த போதும் வாக்காளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புகே தமது பெரும் ஆதரவையும் வழங்கியுள்ளனர்.

Leave a Reply