முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் இந்திய விமான படையிடம் முறைப்படி நேற்று ஒப்படைக்கப்பட்டது.

பெங்களூரில் அமைந்து இருக்கும் இந்துஸ்தான்

ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் ஆகிய இரண்டும் இணைந்து, 1983 -ம் ஆண்டு சுமார் 560 கோடி முதலீட்டில் தேஜஸ் இலகு ரக விமானவடிவமைப்பு திட்டத்தை துவங்கின. தற் போதைய நிலையில் சுமார் 14 ஆயிரம் கோடி வரை இத்திட்டத்திற்காக செலவிடபட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு பாஜக ஆட்சி காலத்தின் பொது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த விமானத்துக்கு, “தேஜஸ்’ என்று பெயர் சூட்டினார்.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய-பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி, இந்திய விமானப்படை தளபதி பி.வி.நாயக்கிடம் ‘தேஜசை’ முறைப்படை ஒப்படைத்தார்.

நாமும் சீனாவை போன்று ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் தன்னிறைவை பெற முயற்சி செய்ய வேண்டும். நமக்கு தேவையான ஆயுதங்களை நாமே தயாரித்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

{qtube vid:=9S3TbhCaS-k}

Leave a Reply