மாண்புமிகு பாரத பிரதமர் டாக்டர்.மன்மோகன் ஜி அவர்களுக்கு எனது பணிவாண வணக்கத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன்..
இந்த கடிதத்தை எதற்க்காக எழுத வேண்டிய நிலை ஏற்ப்பட்டது என்பதை சுருக்கம்மாக இங்கு தருகிறேன்.மாலேகான்,அஜ்மீர்,ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக நடைபெறும் விசாரணைகள் ஆர்.எஸ்.எஸ்.யை

இழிவுபடுத்தும் வகையிலும், வக்கிரப்படுத்தும் வகையிலும், அரசியல் ரீதியான உள் நோக்கம் கொண்ட வகையிலும்,தவறாக சித்தரிக்கும் தொனியிலும் இருப்பதால்தான் இந்த கடிதத்தை எழுத வேண்டி அவசியம் வந்தது.

அரசின் கைகளில் உள்ள ஆதாரங்களே எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு என்பதை நிரூபிக்கும்.மகாராஷ்டிரா பயங்கரவாத ஒழிப்பு பிரிவு வசம் மாலேகான்
குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கர்னல் புரோகித், தயானந்த பாண்டேயும் அப்போதைய சர்கார்யவாஹ் [தற்போதைய சர்சங்கசாலக்] மோகன்ஜீ பாகவத்தையும்,ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஸ்குமாரையும் படுகொலை செய்ய சதிதிட்டம் தீட்டினார்கள் என்பதை உறுதிபடுத்தும் ஆதாரங்கள் உள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக புலனாய்வு நடத்தப்பட்டபோது
மகாராஷ்டிரா பயங்கரவாத ஒழிப்பு பிரிவை சார்ந்த மூத அதிகாரி எங்களது அமைப்பை சார்ந்த மூத்த தலைவர்களிடம் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்.
தலைவர்களை படுகொலை செய்ய சதிதிட்டம் தீட்டினார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.

ஆனால் புலனாய்வு பிரிவை சார்ந்த சிலர் இந்த குண்டு வெடிப்புகளுடனும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்ய சதிதிட்டம் தீட்டிய சதிகாரர்களுடன் ஆர்.எஸ்.எஸ்.யை சம்பந்தப்படுத்த முயற்சித்தனர்.இது அதிர்சிக்குரியது. ஆர்.எஸ்.எஸ். மீது கடுமையான வெறுப்பு கொண்டவர்களுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவர்களுடன், ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களை சம்பந்தப்படுத்தியுள்ளதை எப்படி நியாயம்மாக ஏற்க முடியும்?

மாலேகான் குண்டுபிடிப்புகள் தொடர்பாக மகாராஷ்டிரா பயங்கரவாத ஒழிப்பு பிரிவால் 20.1.2009 ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ஆடியோ சிடியில் பதிவான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த உரையாடல்கள் குற்றம் சாட்டபட்டவர்கள் நிகழ்தியவையாகும்.சதிகாரர்கள் மோகன்ஜீ பாகவத் மீது ரசாயன தாக்குதல் நடத்த ஆலோசித்தது இந்த உரையாடலில் பதிவின் மூலம்மாக தெரியவந்துள்ளது.சதிகாரர்கள் இந்திரேஸ்குமாரை தீர்த்துக்கட்ட ஒருவரிடம் பிஸ்டலை கொடுத்துள்ளனர்.சதிகாரர்கள் ஆர்.எஸ்.எஸ். மீதும்,பா.ஜ.க. மீதும் அளவற்ற கடும் வெறுப்பையும்,விஷத்தையும் கக்கியுள்ளனர் என்பது இந்த உரையாடல் பதிவின் மூலம் நிரூபணம் ஆகின்றது.நீதிமன்றத்திற்க்கு அப்பாற்பட்ட உரையாடல் பதிவுகள் சதிகாரர்களின் எண்ணத்தை வெளீப்படுத்துகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்க்யுள்ள சதிகாரர்களின் நோக்கம் ஆர்.எஸ்.எஸ்.மீது தாக்குதல் நடத்தவேண்டும் என் பது அவர்கள்து உரையாடல்களின் வழியாகவே பதிவு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ராணுவ உளவு பிரிவு அறிக்கையை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.தயானந்த பாண்டேயின் தூண்டுத்லின் பேரில் இந்திரேஸ்குமாரை கொலை செய்ய கர்னல் புரோகித் சதி செய்தார் என்பதை அவரே ஓத்துக்கொண்டார் என்பதுதான் ராணுவ உளவு பிரிவு கொடுத்த அறிக்கை.இதைதான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை ஒரு செய்தியாக வெளியிட்டிருந்தது.

ஆனால் மகாராஷ்டிரா பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தன்னிடம் முக்கியத்துவம் வாய்ந்த,அதிர்ச்சிக்கரம்மான தகவலை வைத்திருந்தபோதிலும், 2010ம் ஆண்டு ஜீலை மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்,எஸ் தலைவர்களை கொல்ல நடந்த சதி பற்றி விசாரிக்கவோ,நடவடிக்கை எடுக்கவோ தேவையில்லை என்றும், அதற்க்கான போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் வேண்டும்மென்றே நீத்மன்றத்தில் தெரிவித்து உள்ளனர். நீத்மன்றத்தில் மகாராஷ்டிரா பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அப்பட்டம்மான பொய்யை சொல்லியுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு தொடர்பு உண்டு என்பதாக ஒரு முடிச்சு போடப்பட்டுள்ளது.மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவர்களா என்பதை விசாரித்தால் ஆர்.எஸ்.எஸ். மீது வீண்பழி சுமத்த முடியாமல் போய்விடும் என்பதற்க்காகதான் சதிதிட்டம் குறித்த விசாரனை செயலிழக்க வைக்கப்பப்பட்டதா?

மாலேகான் குண்டுவெடிப்பில் கர்னல் புரோகித்துக்கு தொடர்பு உண்டு என்பது பற்றியும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்ய நடந்த சதிதிட்டம் குறித்தும் அறிந்தவுடன் எங்களுக்கு பெரும் அதிர்சி ஏற்ப்பட்டது.உடன் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இதனை முழுமையாகவும்,உண்மையாகவும் அரசே விசாரிக்கட்டும் என்று பொறுப்பை அதனிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டோம்.

கர்னல் புரோகித் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகளில் பிளவை ஏற்ப்படடுத்த ரகசிய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார். கர்னல் புரோகித் செயல்பாடு அரசியல் ரீதியானது என்றும்,அவர் யாரோ ஒருவர் ஆட்டுவிக்கும்படி ஆடுகிறார் என்பதையும் நாங்கள் புரிந்துகொண்டோம்.இதே போல மர்மமான நடவடிகையில் ஈடுபட்ட தயானந்த பாண்டேயின் செயல்பாடுகள் பற்றியும் முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இல்லையெனில் முழு உண்மைகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் தொலைதூரத்தில் உள்ள குக்கிராமத்தில் கூட தேச நிர்மானப்பணியில் ஈடுபட்டுள்ளது என்பதை அரசு முழுமையாக அறியும்.

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ் நாரயணன்,ஆச்சார்ய வினோபாவே,ஆச்சார்ய கிருபாளினி,பண்டிட் மதன் மோகன் மாளவியா,பாரத ரத்னா பகவன் தாஸ்,சர்தார் வல்லபாய் பட்டேல்,டாக்டர் ஜாகீர் உசேன் , லால்பகதூர் சாஸ்திரி போன்ற எண்ணற்ற தேசதலைவர்களும்,ஜெனரல் கரியப்பா போன்றவர்களும்,ஆர்.எஸ்.எஸ். நிகழ்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.சங்கபணியினை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.வுடன் மிகுந்த கருத்து வேறுபாடுகள் கொண்ட நேரு கூட இறுதியாக தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.1963 ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்களை சீருடையுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததுடன், ஆர்.எஸ்.எஸ் ஊர்வல அணிவகுப்பில் கலந்து கொள்ள செய்து பெருமிதம் கொண்டார்.

தேசத்தின் மீதும்,இந்த தேசத்தின் அரசியல் சாசனத்தின் மீதும் ஆர்.எஸ்.எஸ் மிகுந்த நம்பிக்கையும்,பற்றும் வைத்துள்ளது.எனவே மாண்புமிகு பாரதபிரதமர் அவர்களே,

1…ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கொல்ல செய்ய தீட்டப்பட்ட சதி திட்டம்?

2… மகாராஷ்டிரா பயங்கரவாத ஒழிப்பு பிரிவு இந்த சதிதிட்டம் குறித்து விசாரணை நடத்தாமல் நசுக்கிவிட்டது ஏன்?

3..கர்னல் புரோகித்,தயானந்த பாண்டே,ஆர்.பி.சிங்,போன்ற அவர்களது சகாக்களின் அரசியல் நிலைபாடு மற்றும் செயல் திட்டம் என்ன?

4.. இந்த செயல்திட்டத்திற்க்கு பின்னனியில் உள்ளவர்கள் யார்?

என்பது குறித்தும் நேர்மையான,சுயேட்சையான,பாரபட்சம் அற்ற விசாரணை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.அதனால்தான் இவ்வாறு வேண்டுகிறோம்.

உங்களை நேரில் சந்தித்து இது குறித்து விவாதிக்க விரும்புகிறேன்.இருவருக்கும் செளகரியம்மான தருணத்தை தாங்கள் குறிப்பிட்டால் நேரில் வந்து தங்களை சந்திக்கிறேன். நன்றி தெரிவித்து இம்மடலை நிறைவு செய்கிறேன்.

சுரேஷ் [பையா] ஜோஷி
சர்கார்யவாஹ்,ஆர்.எஸ்.எஸ்.

Leave a Reply