மு.க. ஸ்டாலின் வீடு சோதனை- முலாயம், மாயவதிக்கு மத்திய அரசு விடுக்கும் மிரட்டலா?

சிவசெல்வம்

 

ஆசை வார்த்தை காட்டியோ அச்சுறுத்தியோ ஆதறைவை பெற்றே காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்கிறது. இதற்க்கு விளக்க படம் கீழே தரப்பட்டுள்ளது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முலாயம் சிங்கிற்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்கிறாரே பேனி பிரசாத் வர்மா?

ரோகினி மதுரை

காங்கிரஸ் அரசுக்கு தரும் ஆதரவை விளக்கிக் கொண்டால் முலாயமே ஒரு பயங்கரவாதியாக தெரிவார்

தேவகோட்டை பா.ஜ., தலைவர் படைவென்றான், வேலூர் அரவிந்த்ரெட்டி, இப்போது பரமக்குடியில் நகராட்சி முன்னாள் பா.ஜ., கவுன்சிலர் முருகன் இப்படி பாஜக.,வின் முக்கிய நிர்வாகிகள் வெட்டி சாய்க்க படுகிறார்களே?

உண்மை தொண்டன்

கவலை தரும் விஷயம்தான். இது அரசியல் காரணமா அல்லது சொந்த விவகாரமா என்பது விசாரணை முடிந்தபிறகே தெரியும். விரைவான விசாரணை தேவை

2009ல் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது போர் நின்றதாகப் ப்ரணாப் முகர்ஜி சொன்னார் என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால் அதன் பின் லட்சம் பேர் கொல்லப்பட்ட போதும் காங்கிரஸ் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்தார். மதவாத பாஜக வரக்கூடாது என்று காரணம் சொன்னார். நான்கு ஆண்டுகள் கழித்து 2013ல் ஆதரவு வாபஸ் என்று அறிவித்துள்ளார். ஈழத் தமிழர் நலனில் இவருக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவே இல்லையே?.

– ஓட்டக்காரத்தேவன், சேத்தூர்.

தமிழர் நலனில் தி மு க க்கு அக்கறை உள்ளதா இல்லையா என்பது குறித்து எவருக்கும் அக்கறை இல்லை. அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இப்போது மாணவர் உண்ணாவிரதம், கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை என்பதால் மாணவர்களது படிப்பும் எதிர்காலமும் பாதிக்கப்படுமே? இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு?

– ஓட்டக்காரத்தேவன், சேத்தூர்.

மாணவர்கள் தங்களது உணர்வையும் கோரிக்கைகளையும் அரசுக்கும் உலகுக்கும் உணர்த்தி விட்டார்கள். போராட்டத்தை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவதே நல்லது.

நன்றி இல.கணேசன் ஜி

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

நண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com

Leave a Reply