"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்" என்று மகாதேவி   திரைப்படத்தில் வில்லன் நடிகர் வீரப்பா தனது சதித்திட்டம் கைக்கூடா விரக்தியில் சாபம் விடுவார். அதேபோன்று 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் , தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கும்  நடவடிக்கைகளும், இந்த பண ஒழிப்பு அதிகாரப் பூர்வமான கொள்ளை, குறுகிய காலத்தில் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில் சாகடித்துவிடும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அளவுக்கு குறைந்து விடும் என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின்  சாபம், பயம் வயிற்றெரிச்சல் நிறைந்த நாடாளுமன்ற உறையும் அமைந்துள்ளது.

 

மிகப்பெரிய பொருளாதார வல்லுநர் மன்மோகன் சிங்கின் ஆட்சி காலத்தில் தான் காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, 100 நாள் வேலைத்திட்டம், ஹெலிகாப்டர் , நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழல்கள் பிரதமர் அலுவலகத்துக்குள் படையெடுத்தன. 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் தொகை பெருகியது. கருப்பு பணமாக பெருக்கெடுத்து ஓடியது.

 

ஆக மொத்தத்தில் மன்மோகன் சிங்கின் பொருளாதார அறிவு தன்னை சுற்றி இருந்த அமைச்சரவை சகாக்கள் அனைவர் மீதும் ஊழல் கறை படியாவும் , தன்மீது அது படியாமல் தபாலிக்கவுமே அன்று அது உதவியது. பாராளுமன்றத்துக்குள் கருப்பு பண ஒழிப்பு நாட்டை நாசமாக்கி விடும், வீழ்த்திவிடும் என்று கருப்பு பண முதலைகளின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக வீர உரையாற்ற இன்று உதவியுள்ளது.

 

பிரதமர் மோடியோ  பொருளாதார வல்லுனர் இல்லைதான் ஆனால் அவர் தன் மீது மட்டும் அல்ல, தன் சகாக்கள் மீதும் ஊழல் கறை படிய அனுமதிக்க வில்லை. புதிய கருப்பு பணங்கள் உருவாக அனுமதிக்க வில்லை, மாறாக அவர்  60வது வருடங்களாக உருவான கருப்பு பணங்களுக்கு கடிவாளமிட்டு  அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 

"நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். எங்கள் முன்னெச்சரிக்கை கருப்பு பண முதலைகள்  தப்பிக்கும் பாதையாக அமைந்து விடக்கூடாது"  என்கிற பிரதமரின் கூற்றிலேயே இத்திட்டத்தின் வெற்றி தெரிகிறது. அதிமுக , திமுக, மாயாவதி, முலாயம் சிங்  என எந்த கட்சி  பேதமும் இன்றி எதிர் துருவங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக போராடுவதன் மூலம் இதன் வெற்றி உறுதியாகியுள்ளது.

 

காஷமீர் முதல் கன்யாகுமரி வரை நீண்ட நாள் நன்மைக்காக இந்த குறுகிய கால வழியை ஏற்றுக்கொள்கிறோம் என்று சாமானியன் புன்முறுவலும் ,  கருத்துக் கணிப்பில் 93 சதவீதம் பேரின் அரசுக்கு ஆதரவான கருத்துக்களும் , உலக வாங்கி அதிகாரிகளின் , பொருளாதார வல்லுனர்களின், அண்ணா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களின்  ஆதரவும் மோடியின் வெற்றியை மேலும் மேலும் உறுதி படுத்துகிறது.

 

இருப்பினும் பல வருடங்களாக பதுக்கி வைத்திருந்த பணம் எல்லாம் இப்படி காகிதமாயிடிச்சே என்று வயிற்றேரிச்சலில் கொதிப்பவர்களின் வாயிலிருந்து சாபத்தைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். எனவே தான் மகாதேவி   வில்லன்  நடிகர் வீரப்பனாக மன்மோகன் சிங் செயல்பட்டுள்ளார் . ஆனால் அது இந்த  தேசத்தை பாதிக்காது.  

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply