அவர் ஒரு கண்டிப்பான பள்ளிக்கூட வாத்தியார்…..!

வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் …

1. பதினான்கு ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?

2. ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

3. ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 26 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

4. ரூபாய் 25 க்கு அரிசி வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?

6. மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?

சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;
மாயாவதி சகோதரி ஆக முடியும்;

நேரு மாமா ஆக முடியும்
காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
ஆனால்…. மோடி மட்டும் தேசத்தின் மகன் ஆகக்கூடாது… இவ்வளவு வெறுப்பு ஏன்?

உங்கள் கோவம் பெட்ரோல் விலை மீது இல்லை.

உங்களால் முன்னைப் போல பொய் பில்களை காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியவில்லை.

ஜிஎஸ்டி யில் முறையாக கணக்கு காண்பித்து வியாபாரம் செய்ய மனசே வரமாட்டேனென்கிறது.

இன்னமும் “அவன் திருடுகிறான், இவன் திருடுகிறான் ” என்று சொல்லிச் சொல்லி *உங்களை சரி செய்துகொள்ள மறுக்கிறீர்கள்*

உங்களால் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை.

இலட்சக்கணக்கான போலி குடும்பகார்டுகள் ஒழிக்கப்பட்டு அரசு மானியம் இப்போது நேரடியாக அவரவரது வங்கி கணக்கில். இதனால் மட்டும் *ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு (அரசுக்கு) வருமானம்.*

நான்கு ஆண்டுகளுக்கு முன் 8 மணி நேர மின்வெட்டு தமிழகமெங்கும்…
அசுர கதியில் உற்பத்தி , தேசத்தின் பிரதான கிரிட்டுகளோடு மின் இணைப்புகளை பலப்படுத்தியதில்

*இன்று ஜீரோ மின்வெட்டு.*

60 ஆண்டாக மின்சாரம் செல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு.

ஐந்து இலட்ச ரூபாய்க்கு இலவசமாய் மருத்துவ காப்பீடு…. ஒவ்வொரு சாமானியனுக்கும்.

தைரியமாக இனி எந்த மருத்துவமும் பார்க்கலாம். ஜெனிரிக் மருந்துகள், ஸ்டென்ட், மற்றும் மருத்துவ சம்பந்தப்பட்ட விலை வீழ்ச்சி. தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரகசாலை 73% வளர்ச்சி.

ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு. முதலீடு அதிகரிப்பு.

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தல். அண்டை நட்பு நாடுகளுடன், வளர்ந்த நாடுகளுடன் மேம்பாட்ட உறவுக.

விவசாயிகளூக்கு தட்டுபாடில்லா உரம், இஸ்ரேல் தொழில் நுட்பம், இடுபொருள் சிலவிற்கு மேல் 150% கொள்முதல் விலை. E-commerce மின் வர்த்தகம்.

இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பிரதமர். *சொத்து சேர்க்க அவருக்கு குடும்பமும் இல்லை.*

Leave a Reply