தற்போது எங்கு பார்த்தாலும் சிகப்பு (+) கூட்டல் குறி நம் கண்களில் படுகிறது .பெயர்ப்பலகைகள் ,வண்டி வாகனங்கள் என எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமாக இந்தச் சின்னம் உபயோகிக்கப் படுகிறது.இந்தச் சின்னத்தை உபயோகப் பதற்கு ஏதாவது அதிகாரம் உள்ளதா ? இதன் பின்னணி என்ன ? யோசித்தால் , இந்தச் சின்னத்தை அவ்வாறு உபயோகப் படுத்தக்கூடாது என்ற விதிமுறை நினைவுக்கு வரும்.

1960 இல் ஜெனிவாவில் நடைபெற்ற கன்வென்ஷன் விதிகளின் படி இந்த சிகப்பு நிற கூட்டல் குறியை மற்றவர்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

வரலாறு என்ன ?

உலக மஹா யுத்தத்தின் போது காயமுற்ற ,நோயுற்ற, யுத்த வீரர்களை, பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக சிகப்பு (+)கூட்டல் சின்னம் பயன்படுத்தப் பட்டது. இந்த சின்னத்தை நடுநிலை வடிவமாக ஏற்று கொண்டு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.

அதன்பிறகு இந்த சின்னம் நிரந்தரமாக ரெட் கிராஸ் சொஸைட்டி மட்டும் உபயோகிப்பத்தென ஜெனீவா கன்வன்சன் உறுதிப்படுத்தியது. அதன்படி எல்லா மாவட்ட உயரதிகாரிகளும் ரெட் கிராஸ்  சொஸைட்டியின் தலைவர்களாக ஆக்கப்பட்டு முக்கிய சிகிச்சை அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்டனர்.

மாநில ஆளுநர் இதற்கான கட்டளைகளை பிரப்பிபார் இது தான் நடைமுறையில் வந்துள்ளது ஆக,இவ்வாறு ரெட் கிராஸ் சொஸைட்டி அங்கீகாரம் உள்ளவர்கள் மட்டுமே சிகப்பு கூட்டல் சின்னத்தை பயன்படுத்தலாம் மற்ற மருத்துவர்கள் கூட இந்த சின்னத்தை பயன் படுத்தக்கூடாது .

மாற்று என்ன ?

மருத்துவர்கள் பயன்படுத்தகூடிய சின்னம் ஸ்வஸ்திக் பாரத நாட்டில் மிகப் புராதன காலத்தொட்டே, எல்லா சுய மற்றும் மங்கல காரியங்களில் , ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுதிள்ளோம்.

மருத்துவ உலகத்திற்கு இந்த வடிவம் முக்கியமான பொருளைத் தருகிறது. ஆர்வேதத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் விளக்கப் படுகின்றன.
1. மருத்துவர்
2. நோயாளி
3. மருந்து
4. உதவியாளர்

இந்த நான்கும் ஒருகிணைந்து மேன்மையோடு செயல் பட்டால் மருத்துவத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் கூறலாம்  என்கிறது ஆயுர்வேதம் . ஆக ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள நான்கு கரங்களும் மேலே சொன்ன நான்கு அம்சங்களால் பிணைக்கப் பட்டுள்ளது

இந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும். ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும். நவீன மருத்துவ விஞ்ஞானியான டாக்டர் ஹாட்மன்ட் அனர்சட் அவர்கள் 'ஆவேயன்டினா'என்னும் மின் அணுக்கருவி கொண்டு 'ஸ்வஸ்திக் ' வடிவத்தை ஆராய்ந்தார். அதன்படி  ஒரு லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின் சக்தி இந்த சின்னத்திலிருந்து வெளிப்படுவதாக பதிவு செய்துள்ளார் .

அவர் செய்த ஆராய்ச்சில் மற்ற பல வடிவங்கள் அடங்கும் .அதன் விவரம் கீழே தரப்படுகிறது.

சிரிக்கும் புத்தர் – 500 போவிஸ் அலகுகள்
ரஷ்யாவின் சாவி – 1000 போவிஸ் அலகுகள்
சிலுவை – 10,000 போவிஸ் அலகுகள்
ஓம் – 70,000 போவிஸ் அலகுகள்
சர்ச் மற்றும் மசூதி வளாகங்கள் -11 ,000 போவிஸ் அலகுகள்
ஸ்வஸ்திக் (சிகப்பு பொட்டுகளுடன் பூஜை செய்யப்பட்டது )-1,00,000 போவிஸ் அலகுகள் .

மேற்படி மின் சக்தி, நேர் மின் சக்தி அதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்த கூடியவை எனவே இதை நமது மக்கள் எல்லா சுப காரியங்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் . பாரத சமுதாயத்தில் வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைகுமிடங்கள் , பணப்பெட்டி இரும்பு கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பயன்படுத்தலாம்.

Tags; மங்களம்,  நல்கும்,  ஸ்வஸ்திக் , ஸ்வஸ்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *