ஊழல் கண்காணிப்பு-ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் நம்பகத்தன்மை மோசமாகி இருப்பதாக பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் மத்தியஅரசு தனது பொறுப்பிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டதாக அத்வானி தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அமைப்புக்கோ, தனி நபருக்கோ நம்பகத்தன்மைதான் மிக முக்கியம் என்று தெரிவித்த அத்வானி, மன்மோகன்சிங்கின் நம்பக தன்மை இன்று மிகவும் மோசமடைந்துள்ளது என்றார். மேலும் ஆ.ராசா, பி.ஜே.தாமஸ், ஹசன் அலி, காமன்வெல்த் என்று அனைத்து ஊழல்-விவகாரத்திலும் மத்திய அரசைவிட உச்ச-நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுத்து-வருகிறது என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply