சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன்நிலையை தாண்டியதாகவே கருதவேண்டி உள்ளது. சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கு தேவையான சமநிலை மற்றும் கட்டுப்பாட்டுடன் அவர்கள் செயல்பட வில்லை. இந்த வழக்கில் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டுமே சமநிலை மற்றும் கட்டுப் பாட்டுடன் செயல் பட்டுள்ளார். இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான கோவில்கள், மசூதிகள், குருத் வாராக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தங்களுக்கு உரிய தனித்துவமான வழிபாட்டு முறைகள் மற்றும் நடைமுறைகளை கொண்டுள்ளன. இதில் நீதித் துறை தலையிடுவது மிகப் பெரிய, கடந்துபோக முடியாத பிரச்னைகளை ஏற்படுத்திவிட கூடும்.

சபரிமலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, 'பண்டோரா பாக்ஸ்' என்று அழைக்கப் படும் அதிகப்படியான தீமைகள் உருவாக காரணமாகிவிட்டது. இதன் மூலம் சுப்ரீம்கோர்ட் ஆபத்தான, எதிர்பாராத மிகையான செயல்பாட்டு பாதைக்கான முன் உதாரணமாகி விட்டது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் 1930ம் ஆண்டு நடந்து கொண்டவிதம் மூலம் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டன. சபரிமலை தீர்ப்பு அதை நினைவுப் படுத்துவதை போல உள்ளது.

சபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என சுப்ரீம் கோர்ட் இனிமேல் கூறுமா? நாட்டில் உள்ள மசூதிகளில் 1 அல்லது 2 சதவீத மசூதிகள்தான், முஸ்லிம் பெண்களை அனுமதிக்கின்றன. மற்றபடி, முஸ்லிம் பெண்கள் வீட்டில்தான் தொழுகை செய்ய வேண்டும். இந்த கட்டுப்பாட்டுக்கு எழுத்துபூர்வமான உத்தரவு ஏதும் இல்லை. ஆனால், நடைமுறையில் அப்படிதான் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நடைமுறையைதான் கணக்கில் கொள்ள வேண்டும். மசூதிகளில் போதிய இடவசதி இல்லை. அதனால் பெண்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை என பலமுஸ்லிம்கள் கூறுவார்கள்.


சூழ்நிலை அப்படி இருந்தால், பெண்களுக்கு முதலிடம்கொடுத்து அவர்கள் மசூதிகளுக்கு உள்ளேயும், ஆண்கள் வெளியேயும் தொழுகை செய்யலாமே. அல்லது, பெண்களுக்கு மசூதிகளுக்குள் நுழைய 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாமே? சபரி மலை தீர்ப்பு என்பது இந்துக்களுக்கு மட்டுமானது என இருக்ககூடாது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் அளித்ததீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.