ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக் கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக துணைநிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.


முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்புக்குபிறகு பிரதமர் அலுவலகம் சுட்டுரை பக்கத்தில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடைகுறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழக கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜல்லிக் கட்டு உள்ளதை வரவேற்ற பிரதமர், தற்போது அது தொடர்புடைய விவகாரத்தில் முடிவெடுப்பது நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாகஅமையும் என்று கருதினார். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும். தமிழகத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். தமிழகத்துக்கு மத்தியகுழு விரைவில் அனுப்பிவைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்' என்று சுட்டுரையில் குறிப்பிடப்பட்டது.

Leave a Reply