தலித் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கடந்த ஆண்டு பிஹாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, இடஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்

 

பாபா சாஹேப் அம்பேத்கரின் கனவை நனவாக்குவதற்கு எனக்கு வாய்ப்புகிடைத்துள்ளது. கடந்த 1956-ல் அம்பேத்கர் நம்மைவிட்டு மறைந்தார். 60 ஆண்டுகள் கழித்து இன்றுதான் அவருக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்காக 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு வேளை இதை நான்தான் தொடங்கி வைக்கவேண்டும் என்பது விதியாக இருக்கலாம்.

 

இந்தகட்டிடம் டெல்லியின் அடையாள சின்னமாக விளங்கும். ஏன் உலகின் அடையாளமாகவும் விளங்கும். நம்மை பொருத்தவரை வரும் தலைமுறையினருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கும். இந்த நினைவிடத்தின் கட்டுமான பணியை வரும் 2018-ம் ஆண்டு மார்ச்மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே ஆண்டில் ஏப்ரல் 14-ம் தேதி இதைதிறந்து வைப்பேன்.

 

அடல்பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போது, தலித், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு ரத்தாகி விடும் என சிலர் வதந்திபரப்பினர். அவர் 2 முறை பிரதமராக இருந்தார். ஆனால் இட ஒதுக்கீடு ரத்தாகவில்லை. மத்தியில் இப்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இட ஒதுக்கீடு ரத்தாகி விடும் என்ற பொய்யை சிலர் மீண்டும் பரப்பி வருகின்றனர்.

 

மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கெல்லாம் இடஒதுக்கீடு தொடர்ந்து அமலில் உள்ளது.

 

எனவே, இட ஒதுக்கீடு கொள்கையில் எந்தமாற்றமும் செய்யப்படாது என்பதை உறுதியாக சொல்கிறேன். இட ஒதுக்கீடு என்பது தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலை யில் உள்ள மக்களின் உரிமை. அதை யாரும் பறிக்கமுடியாது. நான் ஏற்கெனவே கூறியதுபோல, அம்பேத்கரே மீண்டும் தோன்றினாலும் இட ஒதுக்கீட்டை பறிக்க முடியாது.

 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் திடீரென விலகினார். ஏன் தெரியுமா? பெண்களுக்கு சமஉரிமை வழங்குவது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. அப்போது, பெண்களுக்கு சம உரிமை கிடைக்கா விட்டால் நான் அமைச்சர வையில் நீடிக்க மாட்டேன் என்று கூறி விலகினார். இந்த வரலாறு மறக்கப்பட்டது.

 

தலித் மக்களுக்காக மட்டும் அம்பேத்கர் குரல்கொடுத்தார் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து சமூகத்திலும் பின்தங்கி யவர்களின் நலனுக்காக பாடுபட்டார். கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போல சர்வதேச தலைவராக விளங்கினார் அம்பேத்கர்.

 

கடந்ததேர்தலில் தோல்வி அடைந்ததை சிலரால் (காங்கிரஸ்) ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் எங்களை விரும்பவில்லை. எங்களை பார்க்கக்கூட அவர்கள் விரும்ப வில்லை. அதனால்தான் எங்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

பிரதமர் மோடி பேசியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *