இந்த தேசத்தை மாற்றி அமைக்கும் மந்திரக்கோல் தன்னிடம் மட்டுமே உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். 500, 1000ம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றதன் மூலம் நிதித்துறையில் சுவாஷ் பாரத்தையும், கள்ள கறுப்புச் சந்தையில் சர்ஜிக்கள் அட்டாக்கையும் நிகழ்த்தியுள்ளார்.

 

நம் நாட்டில் 17லட்சம் கோடி மதிப்பிலான பணம் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது, இதில் 84% அதாவது 14.75 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுக்கள்  1000, 500 ரூபாய் நோட்டுக்களே. இவைகளே கள்ளப்பணமாக, கருப்பு பணமாக உருப்பெற்று தேசத்தின் பொருளாதரத்தை வலுவிழக்கச் செய்கிறது.

 

பாகிஸ்தானின் பெசாவாரில் 1000ம், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க என்றே மிகப்பெரிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அச்சகத்தை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இயக்கி வருகிறது, இதில் அச்சாகும் கள்ள பணத்தை பூஜ்யம் சதவிதம் கூட நம்மால் குறைக் கூற முடியாது. வருடத்துக்கு ரூபாய் 500 கோடி மதிப்பிலான பணத்தை அச்சடித்து தாவுத் இப்ராகிம், லஸ்கர் இ தொய்பா உள்ளிட்ட தங்கள் ஏஜண்டுகளின் மூலம் இந்தியாவுக்குள் கடத்துகிறது. இந்த பணமே தீவிரவாதிகளுக்கும், பிரிவினை வாதிகளுக்கும் உரமாக செயல்படுகிறது.

 

இதைப்போன்று ஊழல் அதிகாரிகளும், கனிம வளத்தை சுரண்டும் மாபியாக்களும், பெரும் தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் பணம் எல்லாம் கணக்கில் வராத கருப்பு பணமாக உருப்பெற்று ரியல் எஸ்ட்டேட் தொழிலிலும், கள்ளச் சந்தையிலும் முதலீடுகளாக குவிந்து செயற்கை விலை ஏற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. கண்டைனர், கண்டைனராக பதுக்கி அரசியல் வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களின் ஓட்டை விலைக்கு வாங்குகின்றனர், தொழில் அதிபர்கள் அரசியல் வாதிகளையே விலைக்கு வாங்குகின்றனர். சமூக விரோதிகளோ தேச விரோத காரியங்களில்  ஈடுபடுகின்றனர்.

 

இந்திய பொது நிதி கழகத்தின் ஆய்வின் படி 1984ஆம் ஆண்டு நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 21 சதவிதம் அளவுக்கு கருப்பு பண புழக்கம் இருந்தது, 2013 ஆம் ஆண்டு மதிப்பிட்டின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 75 சதவிதம் அளவுக்கு நிகராக கருப்பு பணம் புழக்கம் உயர்ந்துள்ளது.

 

அதாவது 2014 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2047 டிரில்லியன் டாலர், இதன் மூலம் அரசுக்கு கிடைத்த வரிவருவாய் 13.64 லட்சம் கோடி. இதில் 75% மதிப்புக்கு நிகராக கருப்பு பணம் புழங்குகிறது என்றால் சுமார் 10 லட்சம் கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்ப்படுகிறது, இதை சரியாக கணக்குக்கு கொண்டுவந்து வசுளித்தோம் என்றால் நமது மொத்த வரி வருவாய் 23 லட்சம் கோடியாக உயரும். நமது வருடாந்திர செலவினமே 19 லட்சம் கோடிதான்.

 

எனவே கள்ளப்பணமும், கருப்பு பணமும் நம் தேசத்துக்கு செயற்கை பற்றாக் குறையையும் , வறுமையையும் தான் தந்து கொண்டிருக்கிறது. இதற்க்கு கடிவாளம் இடுவதன் மூலம் மட்டுமே வல்லரசு என்ற திசையை நோக்கி ஆக்கப் பூர்வ பயணத்தை நம்மால் மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்த வீடு, சுகாதாரமான வாழ்வு, தரமான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த முடியும். இதை நரேந்திர மோடி போன்ற நிர்பந்தங்களை வெல்லும் தலைவர்களால் மட்டுமே செய்துகாட்ட முடியும். 

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply