மனித சமூகத்தை நன்னெறிபடுத்தி அமைதியை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை அன்பு என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு.

இஸ்லாமியர்களின் புனிதநூலான குரானில் அல்லாவுக்கு 99 பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அனைத்து பெயர்களுக்கும் அன்பு, சமாதானம் என்றே அர்த்தம்உள்ளது. எனவே, இஸ்லாத்தில் வன்முறைக்கு இடம் இல்லை என்பது தெளிவாகிறது.

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பயங்கரவாதம் மிகவேகமாக பரவிவருகிறது. அழிவு என்ற ஒற்றை தத்துவத்துடன் அறிவிலிகளால் வடிவமைக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு ஆயிரக் கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் 90 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. சிரியாவில் நடக்கும் போர்களில் லட்சக் கணக்கான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்து தவிக்கின்றனர்.

இனியும் நாம் பயங்கர வாதத்தை சகித்துக் கொண்டிருக்க கூடாது. அதனை பூண்டோடு ஒழிக்க நாம் உறுதியேற்கவேண்டும். பயங்கரவாதம் தோன்றும் இடத்திலேயே அதை வேரறுப்பது தான் சரியான வழிமுறை.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது எந்தவொரு மதத்துக்கும் எதிரானதல்ல; அவ்வாறு இருக்கவே முடியாது. ஏனெனில், எந்தவொரு மதமும் வன்முறையை ஆதரிப்பதோ, அங்கீகரிப்பதோ இல்லை.

மனித குலத்துக்கே பெரும் அச்சுறு த்தலாக பயங்கரவாதம் உருவாகியுள்ள வேளையில், அன்பை போதிக்கும் தத்துவமான சூஃபியிஸத்தின் மாநாடு இந்தியாவில் நடத்தப் படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்தியாவின் பெருமையே அதன் பன்முகத் தன்மையில்தான் உள்ளது. அந்தப் பன்முகத்தன் மையிலிருந்து மலர்ந்ததே சூஃபியிஸம். இந்தியாவின் ஆன்மிக நெறிகளிலும், பண்பாட்டிலும் சூஃபியிஸம் பின்னி பிணைந்துள்ளது.

உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமெனில், அமைதியைப் பரப்பும் சூஃபியிஸத்தின் கொள்கைகள் பரவுவது அவசியம்.

இஸ்லாமிய சூஃபியிஸத்தின் 4 நாள் சர்வதேச மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது.

Leave a Reply