உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களாக ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தேர்வுபட்டியலில் பிரதமர் மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


அமெரிக்காவின் பிரபலபத்திரிகையான ‘டைம்’ வாரப்பத்திரிகை, உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்தபட்டியலில் இடம் பிடிப்பதை புகழ் மிக்கதாக அனைவரும் கருதுகின்றனர்.

இந்தபத்திரிகை கடந்தாண்டு வெளியிட்ட 100 பேர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதில் மோடியின் சுயவிவரங்களை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதியிருந்தது அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.

 

அதன்படி இந்த ஆண்டுக் கான பட்டியலை ‘டைம்’ பத்திரிகை அடுத்தமாதம் வெளியிட உள்ளது. இதற்காக 127 பேர் அடங்கிய உத்தேசபட்டியலை அறிவித்துள்ளது. இதில் உலக தலைவர்கள், சிந்தனையாளர்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த பட்டியலில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி குறித்து அந்தபத்திரிகை கூறுகையில், ‘உலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது. உலக பொருளாதார வளர்ச்சியில் அவரது நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது’ என செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த 127 பேரில் இருந்து சிறந்த 100 பேரை தேர்ந்தெடுக்க டைம் பத்திரிகையின் வாசகர்கள் ஓட்டளிப் பார்கள். அதன் அடிப்படையில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பெயர்களை பத்திரிகை நிர்வாகம் முடிவுசெய்து அடுத்தமாதம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Leave a Reply