ராகுல் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவாளர் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார் .
காவி பயங்கரவாதம் என பேசுவதும் , லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு அப்படி ஒன்றும் தீவிரவாத அமைப்பு இல்லை என்று கூறியிருப்பதும் அவர் (ராகுல்) பாகிஸ்தானின் ஆதரவாளர் என்றே காட்டுகிறது என நரேந்திர மோடி கூறியுள்ளார்
லஷ்கர் அமைப்புகளை விட இந்து அமைப்புகள் பயங்கரமானவை என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் கூறியிருந்தது . இது பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் கண்டனத்துக்கு உள்ளானது ,