நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக முரளி மனோகர் ஜோஷி தொடர்வார் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .

நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் பதவி பிரதான-எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்படுவது வழக்கம் , இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா சார்பில் முரளி மனோகர் ஜோஷி நாடாளுமன்ற

பொதுக் கணக்கு குழு தலைவராக செயல்படுகிறார். வரும் ஏப்ரல் 30ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், 2011-12 நிதி ஆண்டுக்கும் ஜோஷியே பொது கணக்கு குழு-தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மக்களவை எதிர் கட்சி தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

Leave a Reply