அமர்தியா சென் வங்கத்தில் பிறந்து மேற்கத்திய நாடுகளில் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்.

 
பாஜகவை,நரேந்திர மோடியை, குஜராத்தை, பொருளாதார ஒப்பீடுகளில், குற்றஞ்சொல்ல, இடதுசாரிகளும், மோடி எதிர்ப்பாளர்களும், கையிலெடுக்கும் ஆயுதம் அமர்தியா சென்னின் பேச்சும், புள்ளிவிவரங்களும்தான்..
 
இன்றைக்கு இந்து நாளிதழில், அவரது டிரஸ்டும், மற்றொரு அமைப்பும் இணந்து செய்த மே.வங்க முஸ்லீம்கள் பற்றிய, “மே.வங்கத்தில் வாழும் முஸ்லீம்களின் உண்மை நிலை”–என்னும் ஆய்வரிக்கை..வங்க வாழ் முஸ்லீம்களின் தாழ்நிலையை வெளிப்படுத்தியுள்ளது..
 
இந்த அறிக்கையின் விவரங்கலை பார்ப்பதரற்கு முன், முஸ்லீம்களின் அதல பாதாள, நிலைகளை எடுத்து சொல்லும், இந்த அறிக்கை, இதற்கு காரணமான 33 ஆண்டுகாலம் வங்கத்தை ஆண்ட இடது சாரரிகளையோ, 5 ஆண்டுகாலமாக ஆண்டுகொண்டிருக்கும், மம்தா பானர்ஜியையோ, ஒருவார்த்தைகூட குறிப்படாதது, குற்றஞ்சொல்லாதது, இவர்கலள் எவ்வளவு நடுநிலையாளர்கள், செலெக்டிவ் ஆக பாஜகவை மட்டுமே தாக்குதல் நடத்தக்கூடியவர்கள் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
 
இடதுசாரிகளின் உள்ளூர் செய்திகளைக் கூட 4 பத்தி, 8 பத்தி செய்திகளாக, போடக்குடிய இந்து பத்திரிக்கை கூட முஸ்லீம் ஆதர்வு செய்தியாக இது இருப்பதால், இடதுசாரிகளை குற்றம் சாட்டக்கூடைய வரிகள் ஏதும் இல்லாததால், 5 பத்தியாக இன்று வெளியிட்டுள்லது.
 
வங்க ஜனத்தொகையில், 27.01 சதவீதம் உள்ள முஸ்லீம்களுக்கு, கல்வி, சுகாதாரம் , பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு, இதில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை..சமவாய்ப்புக்களும் கொடுக்கப்படவில்லை..என அந்த அறிக்கை கூறுகிறது..
 
முஸ்லீம் ஜனத்தொகை உயரும் தாலுக்காக்களில், அதற்கு சமமான படுக்கைகள், ஆஸ்பத்ரிகளில் உயர்த்தப்படுவதில்லை..மாநிலத்தின் சராசரி கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதத்திலிருந்து, முஸ்லீம்கள் கல்வி அறிவு பெற்றவர்கள் 7 சதவீதம் குறைவாகவே உள்ளனர்..இதில் கூட ஆண்டுதோறும் 5% மாணவர்கள், “சரியான கல்வி பயிற்றுவிக்கும் சூழல், வசதியும் பள்ளிகளில் இல்லை” என்கிற காரணத்தால், படிப்பை நிறுத்தி விடுகின்றனர்..என்று அமர்தியா சென் கூருகிறார்.
 
 பச்சொரிகமிட்டி மாநிலங்களில் மைனாரிட்டிகளின் நிலை அறிய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது.
அதன் அறிக்கையில், காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில், முஸ்லீம்களின் வாளர்ச்சி படுபாதளத்தில் இருக்கிறது என்று சுட்டிக்காடியதோடு, மோடி முதல்வராக இருந்த குஜராத்தில் , முஸ்லீம்கல், கல்வி, வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டது,
 
அரசு மற்றும் போலிசில் முஸ்லீம்கள், தங்கள் ஜனத்தொகை சதவீதத்தைவிட அதிக இடங்கலில் பணிபுரிகின்ரனர் என்று அந்த அறிக்கை கூறியது.ஆனாலும் கூட இதை செரிக்கமுடியாத எதிகட்சியினர் மோடியை வேறு வழிகளில் தாக்குதல் நடத்தினர்.
 
‘நாடுமுழுதும் வாழும் மறற மதத்தினரைவிட மே.வங்கத்தில் மிகவும் தாழ்ந்த– வறிய நிலையில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்..இவ்வறிக்கையை சால்ஜாப்பு சொல்லாமல், தவிற்காமல், காரணம் கூறாமல், உடனடியாகா கருத்தில் கொண்டு செயல்படுத்தவெண்டும் ‘ எனபது, அமர்தியா சென்னின் அழுத்த்மான பதிவு..
 
இவ்வறிக்கையை சென் அல்லத வேறு யாராவது செய்து வெளியிட்டிருந்தால், அவர்கள் என்ன பாடு பட்டிருப்பர்–எவ்வளவு கணைகள் அவர்கள் மீது பாய்ந்திருக்கும்..எத்தனை பேர் அவர்களுகு காவி சாயம் பூசியிருப்பர்..
 
ஆனால் இந்த அறிக்கையை பற்றி யாரும் வாய் திறக்கமாட்டர்கள்..எந்த பத்திரிக்கையும் விமர்சனம் எழுதாது.. எந்த தொலை காட்சியும் விவாதம் நடத்தாது.
 
நீதி என்பது இடதுசாரிகளுக்கு ”தனீ”
 
முஸ்லீமகள் மீது காங்கிரசும் இடதுசாரிகளும் காட்டிய பரிவு வெறும் “வாய் வீச்சு” எனது இப்போது வெள்ளிடைமலை..சரிதானே,
 
 
எஸ்.ஆர்.சேகர்
மாநில ஊடகப்பிரிவு தலைவர்–பாஜக

Leave a Reply