முத்துகிருஷ்ணபேரியில் பாரதிய ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சுடலைமாடன் தலைமை வகித்தார். செல்வராஜ், வைகுண்டராமன், சந்தனக்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைதலைவர் வெட்டும்பெருமாள் வரவேற்றார். மாவட்டசெயலாளர் ரத்தினராஜ், ஒன்றியதலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் ஞானசேகர், சுரண்டை சங்கரநாராயணன் கூட்டத்தில் பேசினர், முதியோர் உதவிதொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு அரசுஉதவி தொகை வழங்க வேண்டும். முத்துக்கிருஷ்ணபேரி செங்கன்சேர்வாரன்குளம் ஓடையின் கால்வாயை தூர்வார வேண்டும். குளத்துக்கரை வழியாக மயானகரைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும். விடுபட்ட நபர்களுக்கு தமிழகஅரசின் இலவச கலர் டிவியை வழங்க வேண்டும். இலவச காஸ்அடுப்பு வழங்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.கூட்டத்தில் சேர்மையா, திருமலைக் குமார்,சுடலைமாடன், ஆறுமுகநயினார், பெரியசாமி, கண்ணபெருமாள் கலந்து கொண்டனர். சீதாராமன் நன்றி கூறினார்.

Leave a Reply