தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கி பொங்கி பா.ஜ.க வை தாக்கி இருக்கிறார் சகோதரர் நடராஜன் அவர்கள், ஆவியை பார்த்து பயப்படுவதை போலவே காவியை பார்த்து பயப்படுவதாக எண்ணி காவிமயமாக்கப்படுகிறது என்றும் கூறி இருக்கிறார், அது மட்டுமல்ல அதிமுக வை உடைக்கப் பார்க்கிறது, குழப்பம் விளைவிக்க பார்க்கிறது மத்திய அரசு, பா.ஜ.க வை இங்கு வளர விடமாட்டோம் என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறார்.

ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி ஏன் இப்படி அரண்டுபோய் பேசுகிறது என்று எனக்கு தெரியவில்லை அதுமட்டுமல்ல எந்த விதத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் உடைக்க முயற்சித்தோம், எந்த விதத்தில் அவர்களின் உட்கட்சி பிரச்சனையில் நாங்கள் தலையிடுகிறோம் என்பதற்கான ஆதாரங்களை சொல்லிவிட்டு அவர் இந்த குற்றச்சாட்டை சொல்லட்டும் .ஜனநாயக முறைப்படி அந்த கட்சியில் எந்த குழப்பமும் வந்து விட கூடாது என்ற காரணத்திற்காக மரியாதைக்குரிய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த அந்த நடு இரவே மரியாதைக்குரிய ஆளுநர் அவர்கள் அவர்களுக்கான பதவி பிரமாணத்தை செய்து வைத்தார்கள். எந்த விதத்திலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு ஆட்சியில் குழப்பம் வந்த விட கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான், குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றால், சுயலாபம் பெற வேண்டும் என்றால் அன்றே அது பா.ஜ,க வால் பெற்றுஇருக்க முடியும்,

அதுமட்டுமல்ல இப்படி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அந்த கட்சியின் அடிப்படையில் எந்த அதிகாரமும் இல்லாத நடராஜன் எப்படி சொல்கிறார்கள் என்பது என்னக்கு தெரியவில்லை அதுமட்டுமல்ல மரியாதைக்குரிய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது உண்மையான அன்போடு நட்பு பாராட்டிய மோடி அவர்கள் குழப்பம் விளைவித்தார்களா? இல்லையென்றால் நடையை கட்டுங்கள் என்று சொன்ன நடராஜர்கள் குழப்பம் விளைவித்தார்களா என்பது அந்த கட்சியில் தொண்டர்களுக்கும் தெரியும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும் இன்னும் சொல்லப்போனால் பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வராக நீடிக்கலாம் என்று சொல்கிறார் அதிகாரப்பூர்வமான ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க வும் அதைத்தான் சொல்கிறது ஆனால் பன்னீர்செல்வம் அவர்கள் நீடிக்கலாம் என்று சொன்னால் முதல்வர் நீடிப்பதை பற்றிய முடிவையே இவர்

எடுப்பதை போலவே பேசுகிறார் என்றால் குழப்பம் யாரால் ஏற்பட்டுஇருப்பது என்பதை மக்கள் நன்றாக உணர்வார்கள், ஏன் இன்று பா.ஜ.க வை பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள், முற்றிலுமாக அவர்களின் பொங்கல் விழா நோக்கமே பா.ஜ.க வை குறிவைத்து பேசுவது என்பதே பா.ஜ.க தமிழகத்தில் அவர்களுக்கு சவாலாக இருக்கிறது என்பதை தெள்ள தெளிவாக தெரிகிறது. எங்களை பொறுத்த மட்டில் தமிழகத்தை வளர்ச்சி மையமாக்க வேண்டும் அதற்க்கு எங்களை வளர்த்து எங்களை வளர்ச்சி அடைய செய்து எங்கள் கட்சியை உறுதியாக்கி நாங்கள் அதை அடைவோமே தவிர , இன்னொரு கட்சியை உதிரவைத்து அதை அடைவதற்கான அவசியம் பா.ஜ.க விற்கு இல்லை.

நாளை நூற்றாண்டை கொண்டாட விற்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருந்தால் அவர்கள் பா.ஜ.க வை தான் ஆதரித்து இருப்பார்கள், ஏன் இன்று நாமெல்லாம் வருத்தமடைந்திருக்கும் உயிரிழந்து இருக்கும் மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் இருந்தாலும் கூட இன்று பா.ஜ.க வை தான் ஆதரித்து இருப்பார்கள். ஏன் இன்று பா.ஜ.க வை பார்த்து இவர்கள் இப்படி பரிதவிக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால்  பா.ஜ.க வின் உண்மை தன்மையை விளக்க வேண்டியது எனது கடமை என்பதற்காகவே நான் இந்த பதில் அறிக்கையை தருகிறேன்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்.
தமிழக பா.ஜ.க தலைவர்.

Leave a Reply