நரேந்திர மோடி வரும் 12ம் தேதி கும்பமேளாவையொட்டி கங்கையில் நீராடுகிரா குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி வரும் 12ம் தேதி கும்பமேளாவையொட்டி கங்கையில் நீராடுகிரார்.

ஏற்கனவே, பலதரப்பட்ட தரப்பினரும், தலைவர்களும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஆதரவு

கரம் நீட்டி வரும் நிலையில். கங்கையில் நீராடுவதற்காக செல்லும் நரேந்திரமோடி, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், சாதுக்கள், சாதுக்களின் அகாடாக்களை சந்தித்து சில ஆலோசனைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் ‘சாதுக்களும், சன்னியாசிகளும் பிரதமர்வேட்பாளரின் பெயரை முன்மொழிவதா?’ என்ற காங்கிரஸ் கட்சியின் கிண்டலுக்கு. ‘இந்திய பிரதமரின்பெயரை சாதுக்கள் முன்மொழியாமல், பாகிஸ்தானிலிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹபீஸ்சயீதா முன்மொழிய முடியும்?’ என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலடி தந்துள்ளார்.

Leave a Reply