நக்ஸல்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்க-வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கேட்டு கொண்டுள்ளார்.

புணேயில் நடைபெற்ற மாணவர்-நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: நக்ஸல்கள் பிரச்னை உள்நாட்டு பிரச்னை. நக்ஸல்கள் ஜனநாயகத்தின் மீது-நம்பிக்கை வைத்து வன்முறை பாதையை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் .

வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் பிரச்னை தொடர்ந்து-வருகிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது . இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply