தமிழ்நாட்டில் சட்டமேலவை தேர்தலை நடத்துவதற்க்கு உச்சநீதிமன்றம் இடை காலத்தடையை விதித்துள்ளது.

தொகுதி வரையரை மற்றும் வாக்காளர் பட்டியலிலில் குளறுபடி இருப்பதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன், திண்டிவனம்-ராமமூர்த்தி உள்ளிட்ட 11 பேர்

வழக்கு தொடர்ந்திருந்தனர் ., அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதர்க்கு அரசு கவனம் செலுத்திவருவதாகவும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கின் கீழ் மேல்-சபை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து இன்று தீர்ப்பு அளித்தனர்.

தீர்ப்பு குறித்து வக்கீல் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு மேல்சபை தேர்தலை நடத்த-வேண்டும் என்பது பாரதீய ஜனதாவின் கோரிக்கை. ஆனால் அவசர அவசரமாக மேல் சபை தேர்தலை தேர்தல் ஆணையம் மூலமகா நடத்துவதர்க்கு முயன்றனர். தற்போது மேல்_சபை தேர்தலுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply