2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல், இது வரை 60 வருடங்கள் தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளும் நாங்கள் ஊழலை ஒழிப்போம், நாங்கள் ஊழல் செய்திருந்தால் எங்களை முற்றிலும் நிராகரியுங்கள்  என்று குரலை உயர்த்தி வாக்கு கேக்கும் அளவிற்கு வக்கத்து போயிருக்கிறார்கள்.

 

இது வரை தாங்கள் செய்ததை மட்டுமே மக்கள் முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கும் வக்கு இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இல்லவே இல்லை. ஊழலால் தாங்கள் சம்பாதித்த பலாயிரம் கோடி பணத்தையும், இலவசங்களும், வளர்சிகளற்ற கேளிக்கைகளும் நிறைந்த தங்கள் தேர்தல் அறிக்கைகளையும் நம்பி மட்டுமே இவர்கள் களத்தில் நிற்கிறார்கள். இவர்களது ஒற்றுமையை பாரீர்!.

 

தங்கள் தேர்தல் அறிக்கை அற்புதம் நிறைந்தது, தமிழக மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறுகிறார். அவர்களது முந்தைய கால தேர்தல் அறிக்கை ஏதேனும் அற்புதத்தை நிகழ்த்தியதா என்ற கேள்வியை அவரிடம் தொடுத்தால் பதில் வராது. அதே கேள்வியை மக்களிடம் தொடுத்தால் கோபம்தான் பதிலாக கொப்பளிக்கும்.

அதேபோன்று மத்திய அரசு ஒரு கிலோ அரிசிக்கு ரூ.25 ந்தையும்  மாநில அரசு  ரூ.3  மானியமாக வழங்குகிறது ஆனால் அதிமுக.,வினரோ  தாங்கள் இலவச அரிசியை வழங்குவதாக கூறுகின்றனர், ஒரு படி மேலே சென்று அதை அம்மா அரிசி என்றே அழைக்கின்றனர்.  இவர்களது ஏமாற்று ஜாலங்களை பாரீர்!!.

 

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லை. அத்தகைய மாற்றத்தை தரும் சக்தியை, வாய்ப்பை ஏன் நீங்கள் பாஜக.,விற்கு தரக்கூடாது. பாஜக.,வால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சியை எங்களால் தரமுடியும் என்று குரலை உயர்த்தி கூறமுடியும். 14 மாநிலங்களில் ஆட்சி, மத்தியில் இரண்டு வருட ஆட்சி ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக.,வின் மீது எழுப்ப முடியுமா?. பாஜக.,வின் நேர்மையை பாரீர்!.

 

இன்றைய தலைமுறையல்ல நாளைய தலைமுறையினரையும் பற்றிச் சிந்திப்பது பாஜக. சேதாரமில்லாமல் வளங்களை பணக்காரர்களிடம் இருந்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சிந்திப்பது பாஜக. உதாரணத்துக்கு கேஸ் மானியத்தை  ஒரு கோடி மேல்தட்டு மக்களை விட்டுக்கொடுக்க வைத்து அதை ஒன்றரை கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளித்துள்ளது

 

பிரதம் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 20 கோடி ஏழை மக்களுக்கு இலவச வங்கி கணக்கினை கிடைக்கச் செய்துள்ளது, அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது இதன் மூலம் சாத்தியமானதால், அரசின் மானியங்களை மக்களின் வங்கி கணக்குக்கே நேரடியாக கொண்டுச் செல்லும் திட்டத்திலும் வெற்றிக்கண்டுள்ளது. .

 

மானியங்களில் நடைபெற்ற மிகப்பெரிய முறைக்கேடு இதன் மூலம் தடுக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ 30 ஆயிரம் கோடி வரை மிச்சமானது. .சிறந்த நிர்வாகத்தால் மிச்சமான பலாயிரம் கோடியை சாமானியனுக்கும்  விபத்து காப்பீடு, ஆயூள் காப்பீடு, ஏழைகளுக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகுக்கும் அடல் பென்சன் திட்டம். பெண் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய செல்வமகள் சேமிப்பு – திட்டம்' உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

கங்கை –காவிரி உள்ளிட்ட நதிகளையும், கால்வாய்களையும்   இணைப்பது, இதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தையே போக்குவது, விவசாயத்தை வளமாக்குவது. 101 உள்நாட்டு நீர்வழித்தடத்தை பலப்படுத்துவதன் மூலம் 14000 ஆயிரம் கிலோ மீட்டர்க்கு  நீர்வழிப் போக்குவரத்தை விஸ்த்தரிப்பது உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களை  பாரீர்!.

 

 

இளைஞர்கள் நிறைந்த தேசம் பாரதம் , சுமார் 35ந்து கோடி பேர் 10-முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை தனித் திறமை மிக்கவர்களாக மாற்ற!, இவர்களுக்கு தொழிற்பயிற்சி கொடுத்து திறன் மிக்க மனித சக்தியாக மாற்ற!, ஸ்க்கில் இன்டியா திட்டம் .

 

ஸ்க்கில் இன்டியா திட்டம் மூலம் திறன் மிக்க மனித சக்தியை இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகத்துக்கே வழங்குவது எங்கள் இலக்கு என்கிற நரேந்திர மோடியின் முழக்கத்தை  தொலைநோக்கு பார்வையை பாரீர்,

 

ஆகமொத்தத்தில் இங்கே இலவசம் என்று கூற ஏதும் இல்லை. மக்களுக்கு பலனோ ஏராளம் ஏராளம்.     எனவே ஊழல் இல்லாத தமிழகம்! இலவசம் இல்லாத தமிழகம் என்பதை சிந்தித்து பாரீர்!!!. பாஜக.வுக்கு வாக்களிப்பீர்.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Tags:

Leave a Reply