அமெரிக்காவில் என்பிசி தொலைக்காட்சியில் இந்து-கடவுளான விநாயகரை அவமதிக்கும் வகையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு, தொலைக்காட்சி நிர்வாகமும், நிகழ்ச்சியில் பங்குகொண்ட ஹாலிவுட் நடிகர் ஜிம்-கேரி உள்ளிட்டோர் மன்னிப்புகேட்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஜனவரி 8ம் தேதி என்பிசி தொலைக் காட்சியில் சேட்டர்டே நைட் லைவ்| என்ற பாலியல் தொடர்பான நிகழ்ச்சியில் விநாயகரினுடைய உருவத்தை வைத்து விளக்கம் தந்தனர் . இந்தநிகழ்ச்சி உலகமெங்கும் வாழும் இந்துக்களின் மனதை காயப்படுத்தியுள்ளது. எனவே, அந்த விடியோ-காட்சியை உடனடியாக| தனது இணையதளத்திலிருந்து என்பிசி தொலைக்காட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என உலக இந்துத்துவ சங்க தலைவர்-ராஜன் ஜெத் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Leave a Reply