ஓரிஸா மானிலத்தின் தநைகரான புவனேஸ்வரில் இருந்து கிழக்குப் புறமாக சுமார் 300 கல் தொலைவில் உள்ளதே சம்பல் பூர் என்ற சிறிய ஊர் . சம்பல் பூர் துணிகள் நடனங்கள் , பாடல்கள் போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றவை. முக்கியமாக சம்பல் பூர் மேளங்கள் அற்புதமான ஒலி தருபவை. பண்டைய காலததில் அங்கிருந்து வைரங்கள் இதாலிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாம் .

 

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இடத்தில் உள்ளதே சம்லேஸ்வரி என்ற
தேவி ஆலயம் . மகாநதி என்ற நதி ஓடும் இடம் அது. சம்லேஸ்வரி ஆதி சக்திஎன் றும் மகாலஷ்மி, மகா ஸரஸ்வதி, சமேலி, ஜகத் ஜனனி மற்றும் புவனேஸ்வ ரிஎன்றும் அழைக்க படுகின்றாள் . அதனால் தான் அவளுக்கு செய்யப்படும் புஜையில் புவனேஸ்வரி மந்திரம் ஒரு முக்கிய மந்திரமாக உபயோகிக்க படுவதாகக் கூறுகின்றனர் . மேலும் பூரி ஜெகன்னாதரின் சகோதரியான சுபத்திரா தேவிதான் அந்த சம்லேஸ்வரி என்ற சமேலி என்றும் கூறுகின்றனர் .

சம்லேஸ்வரி தேவியின் தோற்றம் பற்றிய கதை

புராணக் கதை ஒன்றின் படி அவள் இலங்கையை ஆண்டு வந்த இராவணன் வழிபட்டுக் கொண்டு இருந்த இலங்கேஷ்வரி என்றும் இராவணன் செய்து வந்த அக்கிரமான  செயல்களைக் கண்டு மனம் வெறுத்துப் போனவள் எவருக்கும் தெரியாமல் அங்கிருந்துக் கிளம்பி சென்றுவிட்ட இலங்கேஷ்வரி மகாநதியின் அடியில் இருந்த பாறைக் குகை ஒன்றில் சென்று குடி அமர்ந்து விட்டாளாம். துர்கையின் அவதாரமான இலங்கேஷ்வரியை இலங்கையில் இருந்து ஹனுமார்; தன்னுடையத் தோளில் ஏற்றிக் கொண்டு அங்கு அழைத்து வந்து விட்டாராம் .

சம்லேஸ்வரி தேவியின் ஆலயம் எழுந்த கதை

அப்படி நதியில் சென்று குடியேறியவளுக்கு அந்த ஆலயம் எப்படி வந்தது. ? அது பற்றி நிலவும் கதை இது. சம்பல்பூர் என்ற இடம் சவான் என்பவர்களின் பரம்பரையில் வந்த பலராம் தேவ் என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் ஆளப்பட் டு வந்தது. நல்ல பலசாலியும் புத்தி கூர்மையும் கொண்டமன்னன் அடிக்கடி மகாநதியைக் கடந்து வேட்டையாடிச் செல்வது வழக்கம் . ஒருமுறை எப்பொழுதும் போலதன்னுடைய வேட்டை நாய்களை அழைத்துக் கொண் டு நதியைக் கடந்து சென்று வேட்டை ஆடிக் கொண் டு இருந் த பொழுது ஒரு அதிசயமான நிகழ்ச்சியைக் கண்டான் .

அங்கு ஓடியாடித் திரிந்த அருமையான சிறு முயல்களை வேட்டை நாய்கள் துரத்திச் சென்று பிடித்து வரும். ஆனால் அன்று அந்த முயலில் ஒன்று அந்த வேட்டை நாய்களை திருப்பி அடித்து விரட்ட வேட்டை நாய்கள் முயலைக்கண்டு பயந்து திரும்பி ஓடிவந்தன. துரத்தி வரும் முயலைக்கண் டு வேட்டை நாய்கள் ஏன் பயந்து ஓடி வருகின்றன என வியந்தான் மன்னன் . சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த முயல் தூரத்தில் இருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று மறைந்து விட் டது.

உடனே அவனும் அந்த இடத்தில் சென்று முயலைத் தேடினான் . அது மறைந்துபோன பொந்தும் அங்கு இல்லை, முயல் வந்ததிற்கான அறிகுறியும் இல்லை. என்ன வினோதம் இது என நினைத்தவாறே வீ டுதிரும்பினான் மன்னன் .

அன் று இரவு மன்னனுடைய கனவில் சமேலிதேவி தோன்றி தான் அந்த மகா நதியின் உள்லே இருக்கும் பாறைகளின் குகையில் குடி இருப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து பூஜிக்குமாறும் ஆணையிட்டால் அவன் கனவு கலைந்தது. மறுநாள் அந்த தேவியை நதிக்குள் இருந்துத் தேடி எடுத்து வந்து, எந்த இடத்தில் இருந்து நாய்களைத் துரத்தி அடித்த முயல் வந்ததோ அதே இடத்தில் சமலேஸ்வ ரி தேவிக்கு ஆலயம் அமைத்தான் . ஆனால் பல ஆண் டுகளுக்குப் பின் அந்த ஆலயம் பழுதடைந்துப் போயிற் று. ஆகவே அதை அவனுக்குப் பிறகு ஆண்ட சத்ரசாய் எனற மன்னன் மீண்டும் புனரமைத்தான் .

சம்லேஸ்வரி ஆலயப் பெருமை

அதுமட்டும் அல்ல அந்த தேவியை முதன் முதலில் வணங்கித் துதித்து >வந்தவர்கள் அங்கு வசித்து வந்த பழங்குடியினர் என்ற நம்பிக்கையும் உள்ளது. அந்த காலங்களில்; பழங்குடியினர் மோகினிகளை வழங்கி வழிபட்ட செய்திகளும் உண்டு. ஒரிஸா மானிலம் அப்படிப்பட் ட ஆலயங்கள் உள்ள இடமும் கூட. அந்த மகா நதியில் வாழ்ந்திருந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்துவிட்டு வரும் வரை தம்மைக் காக்க வேண்டும் என மோகினி என்ற உருவில் சமலேஸ்வரி தேவியை வேண்டுவார்களாம் . அவளை அதனால் 'சௌராசி சமேலி' என்றும் அழைத்தனராம்.

சௌராசி என்றால் எண்பத்து நான்கு. எண்பத்து நான்கு தந்திரங்களிலும் பெரும் திறமைப் பெற்ற சித்தர்களைக் குறிக்கும் வகையிலான அந்தப் பெயரில் , அத்தனை சித்திகளையும் பெற்றவள் என்பதாக நம்பப்பட்டு சௌராசி சமேலி என்று அவளை வணங்கினராம். அந்த நம்பிக்கையின் காரணத்தினால் அந்த ஆலயம் எழுப்பப்பட்ட பொழுது அந்த தேவிக்கு மனிதபலி தரவேண்டும் என்று விரும்பி அதன் அடித்தளத்தின் அடியில் ஒரு கணவனையும் மனைவியையும் உயிருடன் புதைத்தனராம் . அதைத் தவிற ஒவ் ஒரு வருடமும் மனிதபலி கொடுக்கப்பட் டு வந்ததாகவும் , பின்னர் மெல்ல மெல்ல அது மிருக பலியாகமாறி, இன்று பலிகள் தரப்படுவதே நிறுத்தப்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர் .

அந்த ஆலயத்தின் மகிமையை விளக்கும் வகையில் அங்கு நிலவும் ஒரு கிராமியக் கதை இது. முன்பு ஒரு முறை அந்த ஆலயத்தைக் கொள்ளயடிக்க வங்காளத்தைச் சேர்ந்த நவாப் மன்னனின் தளபதி வந்தானாம் . பசுக்களின் தோலினால் செய்யப்பட்டு இருந்த மேளத்தில் ஒருவிதமான விசித்திர ஒலியை எழுப்பிய வண்ணம் இராட்சச மணி ஒன்றை அடித்துக் கொண்டே அந்த ஊரினை அவன் நெருங்கிய பொழுது அந்த தேவியின் உருவத்தில் இருந்த சில பகுதிகள் காணாமல் போய்விட்டனவாம் . அந்த ஊரில் இருந்த அனைத்து ஆலயங்களையும் கொள்ளை அடித்தப் பின் அவற்றை முழுமையாக அழித்து விடும்மன நிலையில் வந்திருந்தான் அவன் .

அங்கு இரவு தங்கி இருந்த பொழுது பால் விற்கும் ஒரு அழகான பெண் உடல் நிறைய ஏராளமாக நகைகளைப் போட்டுக் கொண்டு பால் மோர் என பல பொருட்களை இரவில் அவர்கள் தங்கி இருந்த கூடாரத்திற்கு வந்து விற்றுச் சென்றாளாம் . அதை அருந்தியவர்கள் மறுநாள் தாங்க முடியாத வாந்தி பேதியினால் பீடிக்கப்பட்டு அவதியுற, காலராநோய் பரவி சேனையினர் பெரும் அளவில் இறந்து போக, தப்பித்தால் போதும் என்று அந்த தளபதி மீதம் இருந்த சேனையாட்களுடன் தான் கொண்டு வந்திருந்த மேளம், மணி போன்றவற்றை அங்கேயே போட்டுவிட் டு ஓடினானாம். சும்லேஸ்வரி தேவியே அந்த இளம் பெண் உருவில் வந்து அப்படி செய்து அந்த சேனையை அழித்தாள் என்ற நம்பிக்கை
உள்ளது.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.