ஒரு சித்தாந்தம் உருவாக்கப் படுகிறது. தவறு செய்வது யார் என்று பார்க்காதே, என்ன தவறு செய்கிறார்கள் என்பதையும் நோக்காதே , யாருக்கு எதிராக தவறு செய்கிறார்கள் என்பதை மட்டுமே பார். அவர் குற்றவாளியா?, நிரபரவாதியா?, என்பதை பின்பு தீர்மானிப்போம், என்கிற பாஜக.,வுக்கு எதிரான சித்தாந்தம் தான் அது.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் விமான நிலையத்தில் இளம் பெண் சோபியா, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதும். பாசிச பாஜக ஒழிக என்று விமானத்துக்குள் கோசமிட்டதும், ஒரு கட்சியின் மாநில தலைவரை நேரடியாக விமர்சித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும். நியாயபடுத்த முடியாத ஒன்று. 

ஆராய்ச்சி மாணவி என்று கூறிக்கொள்ளும் சோபியா தொடர்ந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களை ஆதரித்து ட்விட்டரில் எழுதி வந்துள்ளார். விமானத்தில் ஏறும் போதே தமிழிசைக்கு எதிராக கோஷமிட முடிவு செய்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு விட்டே செய்துள்ளார்.

முன்கூட்டியே திட்டமிட்டு அநாகரிகமாக நடந்துகொண்ட இவரது செயலுக்காக காவல்துறை மேற்கொண்ட  நடவடிக்கையை எதிர்த்தது, அவரது செயல் கருத்துரிமைக்கான ஜனநாயக நிகழ்வில் சாதாரண ஒன்றே என்கிற போக்கில்  கருத்து வெளியிட்டது  வைகோ, திருமாவளவன், ஸ்டாலின் போன்றவர்களின் அநாகரிக செயலாகும்.  

தன்னை புகைப்படம் எடுக்க அணுகிய ஆட்டோ டிரைவரை அறைந்த, மின்சார ரயிலில் தொண்டனை அறைந்த, தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை  கொளுத்தி மூன்று பேரை கொன்ற.ஏன் தங்களுக்கு போட்டியாக உருவாகும்  அழகிரியின் சுவர் விளம்பரங்களை சென்னையில் தெருத் தெருவாக தேடி கிழிக்கும் ஸ்டாலினின், திமுகவின் செயல்தான் அப்பட்டமான பாசிசம்.

இத்தகைய பாசிஸ்ட்டுகள் யாரும் கருத்துரிமை குறித்து பாஜக.,வுக்கு பாடம் புகட்ட வேண்டியதில்லை. மெரினா போராட்டத்தில் கூட திமுகவின் சில ஏவல் தமிழட்சிகள்  பாரத பிரதமரை ஒருமையில் பேசியதையோ, தொலைகாட்சிகளில் சிலர் அநாகரிகமாக பேசியதையோ, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜனை  கடந்த இரண்டு வருடமாக மிக மோசமாக சமூக ஊடகத்தில், ஏன் அவரது ட்விட்டர் கமான்ட் பகுதியில் பேசுபவர்களை கூட பாஜக கருத்தாக்கத்தின்  அடிப்படை யிலேயே எதிர்கொண்டு வருகிறது.

கருத்து உரிமை அனைவருக்கும் உரியதே . ஆனால்  கருத்துக்களை பதிவு செய்ய, உணர்வுகளை பிரதிபலிக்க வழிமுறைகள் பல உண்டு. பொது இடங்களில் எதிர்ப்பை பதிவு செய்வது வேறு. உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த  விமானம் உள்ளிட்டவற்றில் முழக்கமிடுவது வேறு.  அதற்கு  ஒரு வருட சிறையும் உண்டு.

இதை போன்ற செயல்களை தொடர்ந்து ஊக்கப்படுதுவோமே எனில் இதைபோன்ற கருத்து பேழைகளை ஸ்டாலின், வைகோ போன்றோரும் அன்றாடம் எதிர்கொள்ள நேரிடும். ஒவ்வொரு விமானத்துக்குள்ளும்  ஒரு காவல் நிலையத்தைய நிறுவ வேண்டிய நிலை வரும்.

தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply