2022- ம் ஆண்டு இந்தியா 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது, அனைவருக்கும் சொந்தவீடு இருக்க வேண்டும் என்பதே எனது  கனவு என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கேரளா மாநிலம் திருச் சூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில்,  நான் முதலில் கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முன்னதாகவே இங்கு வந்திருக்கவேண்டும்.  இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், மாநிலத்தில் அரசியல் வரலாற்றை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், பாஜக அதனுடைய கொள்கைகள், அட்டூழி யங்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில வருடங்களில் இங்கு 200-க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கொல்லபட்டு உள்ளனர். உயிர்தியாகம் செய்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

கேரளாவில் பாஜக மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது. கேரளாவில் அடுத்தவருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக பாஜக வரும். கேரளாவின் தலை விதியை மாற்றும், கேரளாவில் ஆட்சிசெய்து வரும் கூட்டணி அரசுகள் மக்களை ஏமாற்றிவருகிறது. இருகூட்டணியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு மக்களை கொள்ளை அடித்துவருகின்றனர்.

இதனால் கோபம் அடைந்துள்ள கேரளமக்கள் இனி கோபம் அடைய தேவையில்லை. கேரளாவில் மூன்றாவது சக்தியாக  பாஜக உருவெடுத்துள்ளது. மூன்றாவது சக்தியானது கடவுள் சிவனின் மூன்றாவது கண்ணை போன்றது, இது பாவங்களை அழிக்கும், ஊழலிடம் இருந்து விடுதலைஅளிக்கும். மாநிலத்திற்கு வளர்ச்சி மற்றும் அமைதியை கொண்டுவரும். மீனவர்கள் நல்வாழ்விற்காக மத்திய அரசு விரைவில் புதிய திட்டங்களை அறிவிக்கும்.

2022- ம் ஆண்டு இந்தியா 75-வது சுதந்திரதின விழாவை கொண்டாடும் போது, அனைவருக்கும் சொந்தவீடு இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கனவு என்று கூறினார்.

Leave a Reply