தனது மூலக்கூறுகளில் அமைதியை கொண்ட, மகாத்மா காந்தி, கெளதம புத்தரின் பூமியான இந்தியா, ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன் சிலில் நிரந்தர இடம்பெற ஏன் 70 ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும்? .

இந்தியாவுக்கு ஆர்வம் இல்லா நிலையில், முதல் உலகயுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டது. பிரச்னைக்குரிய தேசங்களுக்கு அமைதிப் படை அனுப்பியதில் அது அதிக பங்காற்றி யிருக்கிறது. மேலும் அதன்பங்களிப்பு உலகம் முழுவதும் பாராட்டப் பட்டிருக்கிறது. இது வரை, இந்தியா எந்த நாட்டையும் ஆக்கிரமித்த தில்லை, தாக்கியதில்லை. இந்தியாவின் இரத்தத்தில் அமைதி குடிகொண்டுள்ளது.

இப்படிப்பட்ட நாடு, ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக இடம் பெறவில்லை எனில் , இனியாவது நீதி வழங்கப்படவேண்டும் என்று பெர்லினில் செய்தியாளர்களை செவ்வாய்க் கிழமை சந்தித்தபோது மோடி பேசினார்.

Leave a Reply