மொகாலியில் நடைபெற இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதி போட்டியை காண்பதற்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்கின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி நாளை இந்தியா வருகிறார்.

இந்தியா வரும் பாகிஸ்தான் பிரதமர்ரை வரவேற்கும் மன்மோகன்சிங், அவருடன் சேர்ந்து கிரிக்கெட்-போட்டியை பார்க்கிறார். பிறகு கிலானிக்கு இரவு-விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விருந்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். பிரதமருடன் தேசிய-பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும் மொகாலிக்கு செல்வார் என்று எதிர்பர்க்கபடுகிறது . இரண்டு நாட்டு பிரதமர்களும் வர இருப்பதால் மொகாலியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

{qtube vid:=nrYhDmjuKic}

Leave a Reply