தில்லி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். இடதுசாரி முற்போக்கு சித்தாந்தம் என்ற பெயரிலான இந்த நடவடிக்கையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 நாட்டின் தலை நகரில் இருக்கும் அந்த பல்கலைக் கழகத்தை பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மையமாக மாற்றும் முயற்சியின் மூலம் அதற்கு அவப் பெயர் ஏற்படுத்தப்படுகிறது. தேச நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறதா? இதைக் கண்டு, மத்திய அரசு மௌனமாக இருக்க வேண்டுமா? தேச விரோத சக்திகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்த சதிகாரர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எனது இந்தக் கேள்விகளுக்கு ராகுல் பதில் சொல்லியாக வேண்டும்.

 ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் தங்களது பேரணியின்போது, "பாகிஸ்தான் வாழ்க' என்று கோஷமிட்டுள்ளனர். மேலும், தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதி அஃப்சல் குருவை ஆதரித்தும், காஷ்மீர் விடுதலையடைய வேண்டும் என்றும், "இந்தியா ஒழிக' என்றும் முழக்கமிட்டுள்ளனர்.
 இந்த தேச விரோத சக்திகளுடன் ராகுல் காந்தி கை கோத்துள்ளதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

 கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்தப் பிரிவினை வாதிகளை சுதந்திரமாக செயல்படவிட்டு, நாட்டில் மற்றொரு பிரிவினை ஏற்படுவதை ராகுல் காந்தி விரும்புகிறாரா? ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களின் அறிக்கைகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு தேசநலனில் அக்கறை இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபண மாகியுள்ளது.

 மத்தியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் வெற்றிகரமான செயல்பாட்டை கண்டு காங்கிரஸ் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளது. அதனால் பொறுப்பான எதிர்க் கட்சியாக எப்படி செயல்படுவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களால் முடிவுசெய்ய இயலவில்லை.

 ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக 125 கோடி இந்திய மக்களின் சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் கேள்விகள் கேட்டுள்ளேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். மேலும் தனது நடவடிக்கைக்காக ராகுல் காந்தி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

நன்றி அமித் ஷா

பாஜக தேசியத் தலைவர்

Leave a Reply