கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது .

இதுவரையிலும் அறிவிக்க பட்ட முடிவுகளில் மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சாயத்துகளில், பாரதிய ஜனதா 12 இடங்களிலும் காங்கிரஸ் 4இடங்களிலும் , மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 10 மாவட்ட பஞ்சாயத்துக்களில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்க வில்லை..

176 தாலுகா பஞ்சாயத்துக்களில் பாரதிய ஜனதா 68 இடத்தை கைப்பற்றி உள்ளது.காங்கிரஸ் 31 இடத்தையும் , மதச்சார்பற்ற ஜனதாதளம் 29 இடத்தையும் கைப்பற்றியுள்ளது

முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது , இன்று இரவுக்குள்ளாக அனைத்து முடிவுகளும் அறிவிக்க பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று 12 ஆக மாறி உள்ளது, கடந்த முறை நடை பெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா பெல்லாரி மாவட்ட நிர்வாகத்தை மட்டும் பிடித்திருநது. ஆனால், இப்பொழுது பாரதீய ஜனதா12 இடங்கலை பிடித்திருகிறது .

அண்மையில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாரதீய ஜனதா அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலிலும் இப்போதுமீண்டும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

{qtube vid:=9WxhUmgEdXY}

Leave a Reply