பா.ஜ.க, மட்டுமே நிகழ்கால, நாட்டின் வருங்கால கட்சியாக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக.,- அதிமுக., இறந்த கட்சிகளாக மாறிவிட்டன. இன்று பா.ஜ., பலவீனமாக இருக்கலாம். 1984ல் லோக் சபாவில் இரு எம்.பி.,களுடன் இருந்த பா.ஜ., இன்று 282 எம்.பி.,க்களுடன் ஆட்சியில் உள்ளது.கடந்த லோக் சபா தேர்தலில் நாடு முழுவதும் மோடிஅலை வீசியது. தமிழகத்தில் மட்டும் தேர்தல் வித்தியாசமாக அமைந்தது. 'ஜெயலலிதா வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார்' என மக்கள் ஓட்டளித்தனர். ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமாக அமையும். வரும் சட்ட சபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும்.


ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க., -அ.தி.மு.க., ஆட்சிசெய்கின்றன. தி.மு.க., மீது கோபம் ஏற்படும் போது அ.தி.மு.க.,விற்கும்; அ.தி.மு.க., மீது கோபம் ஏற்படும்போது தி.மு.க.,விற்கும் ஒட்டளிக்கின்றனர். இந்தநிலை இனி நீடிக்காது. சீட்டாட்டாடத்தில் 'ஆஸ்' இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதுபோல 'ஆஸ்' என்ற நரேந்திரமோடி ஆதரவின்றி யாரும் வெற்றிபெற முடியாது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஊழல் மிகுந்ததாக இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகாலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஊழல் இல்லை. தமிழக விவசாயிகள் காளைகளை அன்புடன் கொண்டாடுவர். ஆனால் மத்தியில் இருந்த காங்., திமுக., கூட்டணி அரசு ஜல்லிக் கட்டை தடைசெய்தது. நான் அமைச்சரானதும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பிறப்பித்தேன். தற்போது ஜல்லிகட்டிற்கு இடைக்காலதடை உள்ளது. நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான வாதங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும்.


அலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல் விளையாட்டு போட்டிகளில் கட்டடங்கள், நிலக்கரி ஊழல் என பஞ்சபூதங்களிலும் காங்.,- தி.மு.க., கூட்டணி அரசு ஊழல்செய்தது. மோடி அரசு வந்தபின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.3 லட்சம் கோடிவரை வருவாய் கிடைத்தது.

பா.ஜ.க, அரசு விலைவாசியை கட்டுப்படுத்தியுள்ளது. தானியங்கள் விலை மட்டும் சற்று விலை உயர்வாக இருந்தபோதும், அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறது.

ரூ.400 ஆக இருந்த எல்இடி., பல்பு விலை மோடி அரசால் ரூ.70க்கு குறைக்கப்பட்டது. இதனால் 5 கோடி வீடுகள் பயன் பெற்றன. ஆனால் தமிழகத்திற்கு இந்தசலுகை கிடைக்கவில்லை. தமிழக அரசு, தனியாருடன் ஒப்பந்தம் போடுவதிலும், கமிஷன் பார்ப்பதிலும் குறியாக இருப்பதால், எல்இடி., பல்புகளை வாங்க மறுத்துவிட்டது.


பணத்தை கொடுத்து ஓட்டுக்களைபெற முயற்சி நடக்கிறது. மனமா, பணமா என வரும் போது மக்கள் மனத்திற்கு முக்கியத்தும் கொடுப்பர்.

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது.

Leave a Reply