பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்புவிருந்தினராக பங்கேற்க இசைவு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பட்டமளிப்புவிழா மேடையில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, இந்த விழாவின் போது, பிரதமர் மோடிக்கு டாக்டர் பட்டம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக அவரது ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆட்சித் துறையில் புதுமை திட்டங்களை அறிமுகப்படுத்தி, சீர்திருத்தத்தை ஏற்படுத்தியமைக்காகவும், பொதுச் சேவை மற்றும் ஆட்சித்துறையில் பிரதமர் மோடி ஆற்றிய அளப்பரிய பணிகளுக்காக அவருக்கு சட்டங்களின் முனைவர் (LLD) (honoris causa) என்ற கவுரவப்பட்டம் வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்தபட்டத்தை ஏற்றுக்கொள்ள பிரதமர் மோடி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், பனராஸ் பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது ஏன்? என்பது தொடர்பாக இன்று தனது சிறப்புரையின் போது மோடி விளக்கம் அளித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முடிவுசெய்த பனராஸ் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கரண் சிங் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை கவுரவப் படுத்தும் வகையில் பனாரஸ் பல்கலைக் கழகம் செய்த அறிவிப்பையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். ஆனால், இதைப்போன்ற பட்டங்களில் இருந்து விலகி இருக்கவே நான்விரும்புகிறேன்.

இதைப்போன்ற சிறப்பு மிக்க பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் வகையில் இந்ததொகுதி எம்.பி.யாக என்னை தேர்வுசெய்த வாரணாசி மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

Leave a Reply