இஷ்ரத் ஜஹான் வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் மாற்றியமைக்கப்பட்டதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது.

லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தீர்க்கமாக தெரிந்து கொண்ட பிறகுதான், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோரை குஜராத் போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

 ஆனால், இச்சம்பவத்தில் அப்போதைய குஜராத்முதல்வர் நரேந்திர மோடியை சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் பிரமாண பத்திரம் திருத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

 அதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையானது வெறும் துறைரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல  என்றும், அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின்பேரிலேயே அந்தப் பிரமாணப் பத்திரம் திருத்தப்பட்டது எனவும் முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.

 அப்படியெனில், இந்தவிவகாரத்தில் ப.சிதம்பரம் மட்டுமல்லாமல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

 மேலும், இந்த பிரமாண பத்திரம் மாற்றியமைக்கும் நடவடிக்கையின் போது சிபிஐ அமைப்பால் தாம் துன்புறுத்தப்பட்டதாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உள்துறை சார்புச்செயலராக இருந்த எஸ்.மணி தெரிவித்திருக்கிறார்.

 இந்த குற்றச்சாட்டை வெறுமனே மறுப்பதற்குப் பதிலாக, அது தொடர்பாக விளக்கமளிக்க காங்கிரஸ் கட்சி முன்வரவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது 

நன்றி ; வெங்கய்ய நாயுடு.

Leave a Reply