மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலி தனமான போராட்டங்களை நடத்தி, தனது கடமையை முடித்து கொண்டதாக காட்டும் திமுக,வின் செயல் கண்டிக்கத்தக்கதாகும் , என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
கடந்த காலங்களில் 500க்கும் அதிகமான தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், மீனவர்களாலும் கொல்லபட்டுள்ளனர். இந்த செயல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டிக்க தவறியதன் காரணமாக தான், தற்போது 106மீனவர்களை சிறை பிடிக்கும் அளவிற்கு துணிந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்