சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது . அந்த கூட்டத்திர்க்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அகில இந்திய பாரதிய ஜனதா முன்னாள் தலைவரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பங்காரு லட்சுமணன், அகில இந்திய நிர்வாகிகள் ராம்லால், இல.கணேசன்,சதீஷ், முரளிதர

ராவ், நிர்மலா சீதாராமன், சுகுமாறன் நம்பியார், மாநில நிர்வாகிகள் எச்.ராஜா,மோகன்ராஜுலு, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நாகேந்திரன், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக தேர்தல் பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன், அனைத்து வேட்பாளர்களுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, கலை இலக்கிய பிரிவு சார்பில் முருகமணி தயாரித்த பிரசார பாடல் கேசட்டை வெளியிட்டார். பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”இந்த தேர்தலில் நாம் யாருடைய கூட்டணிக்காகவும் ஏங்கவில்லை; யாரும் நமக்கு தேவை இல்லை. சொந்த பலத்தில் தனித்து நிற்கிறோம்.இரட்டை இலக்கத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைவோம். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் நம்மை ஓரம் கட்ட முடியாது. நம்முடைய கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், ஜனதா கட்சி உள்ளது” என்றார்

Leave a Reply