தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் என் தமிழ் சொந்தங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். வான்புகழ் வள்ளுவனின் குறள் நாடு முழுவதும் அனைத்துமொழி மக்களாலும் கொண்டாடப்படும் இரண்டாம் ஆண்டாக இதனை உருவாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழர் சார்பில் நன்றி கூறுவோம்.

தமிழ், தமிழன், தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகிற்கே முன்னு தாரணமாக விளங்க நாம் நம்மை அர்ப்பணித்து பணியாற்றுவோம். உழவும்தொழிலும் உன்னதம் பெற்று உயர்குடி தமிழ் குடியாக மாற மதுபழக்கத்தை தமிழன் மண்ணில் இருந்து அகற்ற உறுதி ஏற்போம். நம் தாயகம் வாழவும் தமிழகம் ஓங்கி உயரவும் இப்பொங்கல் நன்னாளை துவக்கமாக அமைப்போம். இன்றைய பொங்கல் திருநாள் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு சிறிய ஏமாற்றம்தந்தாலும் நாளைய வெற்றிக்கான பிரார்த்தனை நாளாக கொண்டாடுவோம். தை பிறந்தால் வழிபிறக்க உறுதி ஏற்போம்! உழைப்போம்! உயர்வோம்! அனைவருக்கும் மீண்டும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டது

Leave a Reply