கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதைத்து மக்களை காத்தபோது நரகாசுரன் தன்னை வதைத்த தினத்தை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று கேட்டவரத்தினால் வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி திருநாள்.


ஸ்ரீ இராமசந்திரமூர்த்தி இலங்கையில் இராவணனை அழித்து தனது வனவாசத்தையும் முடித்து சீதை, லெட்சுமணனுடன் அயோத்தி மாநகரம் வந்து முடிசூட்டி கொண்ட நாளை அயோத்தி மக்கள் வீடெல்லாம் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.இருளை அகற்றி ஒளி ஏற்றிய தீபாவளி திருநாளை இன்றும் நம் நாட்டு மக்கள் கண்கூடாக கண்டு மகிழ்கிறார்கள்.


நம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று நம் நாட்டினை ஒளிநிறைந்த வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எல்லாத்துறைகளிலும் முன்னேற்றத்தை நாம் காண துவங்கியுள்ளோம். திரு நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலில் நம் திறமைகளை வளர்த்து நாட்டின் வளர்ச்சியில் பணிபுரிந்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்றுவது நம் தலையாய கடமையாக அமையட்டும்.


தீபாவளி நாளில் வரும் மாசுகளை உடனே அகற்றி தூய்மையானதாக நம் வீட்டையும் நாட்டையும் உருவாக்குவோம். நாட்டுமக்கள் அனைவரும் எல்லாவளமும் பெற்று நல்வாழ்வு வாழ இத்தீபாவளி திருநாளில் ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன்.

 

(பொன்.இராதாகிருஷ்ணன்)

Leave a Reply