முன்னாள் போலீஸ் அதிகாரி பிரேம் குமார் இன்று சென்னையில் காலமானார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரேம் குமார், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவர் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.