2 ஜி ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி ராம் லீலா மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது.
பொது கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையின் மூலம் மட்டுமே நீதிகிடைக்கும் என தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து, அதன் முன்பு பிரதமர் ஆஜராக வேண்டும் இல்லாவிடில் தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அருன் ஜேட்லி வலியுறுத்தினார்.
பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராக தயார் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பதற்கு எதிராக அவர் இருக்கிறார் . இதை எதிர்க்கட்சியால் ஏற்றுக்கொள்ள இயலாது . கூட்டு குழு விசாரணையை சந்திக்க விருப்பம் இல்லையெனில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.