அசோக்சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக மத்தியஅமைச்சர் பிருத்வி ராஜ் சவான் தேர்வு செய்யப் பட்டுள்ளார், மாநிலத்தின் புதிய முதல்வராக பிருத்வி ராஜ் சவான் நாளை பதவி ஏற்கிறார்.

கார்கில்போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும், ராணுவத்தில் நீண்டகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய வீடுகளை அசோக் சவானின் மாமியார், மனைவியின் சகோதரி மற்றும் ஒரு நெருங்கிய உறவினருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து முதல்வர் பதவியை அசோக்சவான் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply