முயல் குட்டி போடுவது போல "பெற்றுத்தள்ளாதீர்கள்"
கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை

கடந்தவாரம், ஸ்ரீலங்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு விஜயம் செய்த 120 கோடி ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மதகுரு போப் பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கிய அறிவுரை முக்கியமானது.

கத்தோலிக்கர்கள் "முயல் குட்டி போடுவது போல" பிள்ளைகளை பெறவேண்டியதில்லை" என்ற அருளுரை வழங்கி இருக்கிறார்.

1968 ஆம் ஆண்டு போப் 6-ம் பால் அவர்களை கத்தோலிக்கர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதை அனுமதிக்கவில்லை." குழந்தைகளை இறைவன் கொடுக்கிறார், அதை தடை செய்ய நமக்கு உரிமை இல்லை"- என்று சொல்லியிருக்கிறார்.

எனவே பெருகிவரும் ஜனத்தொகையால், வறுமையும் பொருளாதார வீழ்ச்சியும் எதிர் கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ்– கடந்த 15-ஆண்டுகாலமாக, தான் இயற்றிய குடும்ப கட்டுப்பாட்டு சட்டத்தை, கத்தோலிக்க சர்ச்சின் நெருக்கடி காரணமாக, அமுல்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது,– இது ஒன்று…..

போப் சந்தித்த, ஒரு பெண்மணி, 7 குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்றவர், 8வது முறை கற்பம் தரித்திருந்தார். அவளும் –போப் 6-ஆம் பால் சொன்னதைதான் சொன்னார். "கடவுள் கொடுத்த குழந்தையை பெற்றெடுப்பது என் வேலை"- என்றார், –இது இரண்டு……

இந்த இரண்டு காரணங்களே– போப் பிரான்சிசை இப்படி அறிவுரை கூற தூண்டியிருக்கலாம்.

ஆனால் போப் 6-ம் பால் சொன்னதை கண்டிக்காத நம் இந்திய அரசியல் கட்சிகள் ,,மீடியாக்கள்,
"வத வத என" பெற்று ஜனத்தொகை கூடிய பிறகு சிந்திக்கும் போப் பிரான்சிஸ் போப் அல்லாது— 40-வருடங்களுக்கு முன்பிருந்தே,— மூன்று போதும்,– பிறகு ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என இரண்டாக சுருக்கி—- இன்று நாமிருவர் நமக்கு ஒருவர் —-என மாறிய இந்து சமுதாயத்தை மட்டும்— ஏன் இழிந்துரைக்கின்றனர்.

நாட்டிற்கு ஒருவர் பிள்ளை , மதத்துக்கு ஒரு குழந்தை ," நமக்கு இருவர்"– என சாஷி மகராஜ் சொன்னது முழுவதையும் சொல்லாமல்– 4-பேர் பெற்றுக் கொள்ள வேண்டும் என சொன்னார் என "பாதி உண்மையை "-கூறும் பத்திரிக்கைகளில் செயல் நியாயமானதா?

ஆண்டுக்கு 24-சதவீதம் ஜனத்தொகையை பெருக்கிக் கொண்டுவரும் முஸ்லீம்கள் ஒருபுறம், —ஜனத்தொகை உயர்ந்ததை இப்போது தான் உணருகின்ற கிறிஸ்தவர்கள் ஒருபுறம் —ஜனத்தொகையை குறைத்திக் கொண்டு வரும் இந்துக்கள் ஒரு புறம்……

இந்நிலையில் "இந்து சந்நியாசிகளின் பேச்சில் நியாயமும், நேர்மையும், தர்மமும்"– இருப்பதாகத்தானே தெரிகிறது!

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Tags:

Leave a Reply