பாஜக ஆட்சி, மத்தியில் வந்தபிறகு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா விஜயம் செய்துவிட்டு வந்தபிறகு, இந்தியாவில் உயிர்காக்கும் மருந்துகள், குறிப்பாக "கேன்சர் டிரக்ஸ்" பல மடங்கு விலை உயர்ந்துவிட்டது, இதற்கு காரணம் மோடி அவர்கள் அமெரிக்காவிடம் போட்ட ஒரு ஒப்பந்தம் தான் காரணம்!

இப்படி ஒரு குற்றச் சாட்டை, கடந்த மூன்றுமாத காலமாக இடதுசாரிகளும், காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களும் "ஜாலியாக" பரப்பி வருகிறார்கள். இது அப்பட்டமான பொய்! ஜமக்காளத்தில் வடிகட்டிய புளுகு!

இது நான் கலந்துகொள்ளும் "விவாதங்களிலும்" வைக்கப்படுகிறது! இந்த புளுகுமூட்டையை ஆதாரபூர்வமாக அவிழ்த்துவிட்டு உண்மையௌ எப்படி வெளியே கொண்டிவருவது என யோசித்த போது, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மருந்து வணிகம் நடத்தும் முதலாளி, என் அருமை நண்பர் என்னிடம் 100 மருந்து நிறுவனங்களின் விலை பட்டியலை சமர்ப்பித்தார்.

அவைகளில் நான் கண்டது ஆச்சரியப்பட வைத்தது. கடந்த மே மாதம் மோடி பதவி ஏற்றதற்கு பிறகு எந்த ஒரு மருந்தின் விலையும், குறிப்பாக "கேன்சர்" போன்ற நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளின் விலை ஏறவில்லை. ஒருசில மருந்துகள் தவிர, அது கூட "சாதாரண்" விலை ஏற்றம்தான்.

பின் ஏன் மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது!

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். ஒரு அட்டை மருந்தின் விலை ரூ. 100 என வைத்துக் கொள்வோம். அது ரூ. 80லிருந்து ரூ.90 வரை "ஸ்டாகிஸ்ட்" அல்லது "டீலருக்கு" "இன்வாய்ஸ்" செய்யப்படுகிறது. இந்த "ஸ்டாகிஸ்ட்" ரூ. 90 லிருந்து ரூ.100 வரை அதாவது 10 லிருந்து 20 சதம் லாபம் வைத்து, மருந்து கடைகாரர்களுக்கும்–
மருந்து கடைக்காரர்கள் மருந்தில் பொறிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கும் அதாவது எம்.ஆர்.பி. விலைக்கும் விற்கிறார்கள்!

இங்குதான் பிரச்சனை MRP விலை இம்மாதிரி மருந்துகளில் 100 முதல் 150 சதவீதம் அதிகமாக குறிப்பிடப்படுகிறது. அதாவது ரூ. 100 க்கு டீலர் இன்வாய்ஸ் செய்யும் மருந்தில் ரூ. 200 முதல் ரூ 300 வரை MRP பிரிண்ட் செய்யப்படுகிறது.

"இந்த முறை" UPA அரசு காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

"கான்சர் மருந்துகள்" பெரும்பாலும், டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் நேரடியாக, நோயாளியிடம் விற்கிறார்கள் அவர்கள் ரூ. 100 மருந்தை ரூ. 300 க்கு விற்று கொள்ளை லாபம் அடைகிறார்கள்! இந்த "கொள்ளை லாபம்" காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக அரசு செய்ய வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிரது. அதுதான் மருந்து கம்பெனிகளை உடனடியாக அணுகி…. MRP விலை என்பது, மருந்து வணிகர்களுக்கு கொடுக்கப்படும் 20 சதவீத லாபத்திற்கு மேல் இருக்காக்கூடாது…(. அதாவது மருந்து "இன்வாய்ஸ்" செய்யப்படும் விலைக்கும், MRPக்கும் இடையே உள்ள லாபம்) என மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இப்பணியை, மருந்து விலைப்பட்டியல் ஆதாரங்களுடன், மத்திய உரம் மற்றும் ரசாயான அமைச்சார் திரு. ஆனந்த குமாருக்கு நான் கடிதம் மூலம் எழுதி செய்துவிட்டேன்.

விரைவில் பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.

 

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply