இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 51 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள நேருவின் நினைவிடத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் வலை தளத்தில் நேருவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "ஜவஹர்லால் நேருவின் இறந்த நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திர போராட்ட வீரராகவும் முதல் பிரதமராகவும் அவரின் பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply